Shadow

Tag: இயக்குநர் P.S.மித்ரன்

சர்தார் விமர்சனம்

சர்தார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மக்களுக்கு அலெர்ட் கொடுக்கும் ஒரு விஷயத்தை எடுத்து, அதை டீடெய்லாக அலசி அதில் கமர்ஷியல் சேர்த்து ஒரு பேக்கேஜிங்காக சர்தாரைக் கொடுத்துள்ளது மித்ரன் - கார்த்தி கூட்டணி. காவல்துறையில் பணியாற்றும் கார்த்தி ஓர் விளம்பரப்பிரியர். அவரது தந்தை சர்தார் ஒரு தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டவர். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில், சர்தாரின் பெயரை வைத்து பல அரசியல் நடக்கிறது. மேலும் ஒரே நாடு ஒரே பைப்லைன் என தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் பயன்பாட்டு நீரையும் எடுத்துக் கொண்டு அதன் மூலமாக கொள்ளை லாபம் பார்க்க நினைக்கிறார் ஓர் அதிகார மட்ட வில்லன். அந்த வில்லனுக்கும் சர்தாருக்குமான லிங்கை லைலா ஓப்பன் செய்ய, கார்த்தி அதை ஃபாலோ செய்ய, அடுத்தடுத்து என்ன என்ற சுவாரசியத்துடன் பயணிக்கிறது படம் தான் ஏற்கும் வேடங்களுக்கு உடல்ரீதியாக நியாயத்தைச் செய்வதில் வல்லவர் கார்த்தி. இரு கதாபாத்திரங்களின் தன்மை ...
ஹீரோ விமர்சனம்

ஹீரோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜென்டில் மேன் 2 என்றே படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கலாம். அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற நன்நோக்கமுடைய கொள்ளைக்காரன் சத்தியமூர்த்தியாக அர்ஜுன் வருகிறார். படத்தின் நாயகன் அவர் தான். ஸ்கூல் படிக்கும் பொழுது சக்திமான் தொடர் பார்த்து சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென ஆசைப்படுகிறான் சக்தி. வளர்ந்த பின்னும் அந்த ஆசை விடாமல் சக்தியைத் துரத்த, ஜென்டில் மேன் சத்தியமூர்த்தியின் உதவியுடன், ஒரு முகமூடி அணிந்து சூப்பர் ஹீரோவாகி விடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. தொழிலதிபர் மகாதேவாக அபய் தியோல். சத்தம் போடாத, பணம் சம்பாதிப்பதில் கண்ணாக இருக்கும் காரிய வில்லனாக அசத்துகிறார். ஆனாலும், க்ளைமேக்ஸில் அவரை வழக்கமான சோப்ளாங்கி வில்லனாக்கி, சூப்பர் வில்லனாகப் பரிணமிக்க வேண்டியவரைச் சாதாரண வில்லனாக்கி உச்சபட்ச அநியாயம் செய்துள்ளார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். கடல் நீரில் ஓடும் வாகனத்தைக் கண்டுபிடித்ததற்கான பேடன்ட் உரி...
தமிழ்ப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோல்

தமிழ்ப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோல்

சினிமா, திரைத் துளி
சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க, பாலிவுட்டின் மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “எனது முதல் படமான இரும்புத் திரை அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. அதே போல் ஹீரோ படத்தின் வில்லனும், கடுமையான குணாதிசயங்கள் கொண்ட பொறுப்பானதொரு பாத்திரம். அவர் கணிக்க முடியாக் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினை குறைந்தபட்ச புன்னகையாகத்தான் இருக்கும். ஆனால் அதற்குக் கீழே அதிக பயங்கரவாதம் உள்ளது. யார் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்துவார்கள் என நான் என் கற்பனையில் என் எண்ண ஓட்டத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அபய் தியோல் தான் மிகவும் பரிபூரணமாக இருந்தார். அவர் இந்தக் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. சிவகார்...
இரும்புத் திரை விமர்சனம்

இரும்புத் திரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிலிட்டரி ஆஃபீஸரான விஷாலுக்கு வங்கியில் பெர்ஸனல் லோன் தர மறுக்க, ஒரு ஏஜென்ட் போலி ஆவணங்கள் மூலம் பிசினஸ் லோன் வாங்கித் தருகிறான். தங்கையின் கல்யாணத்திற்காக வாங்கின அப்பணம், நூதன முறையில் திருடப்படுகிறது. போலி ஆவணங்கள் காட்டி வாங்கப்பட்டதால் போலிஸிலும் புகார் அளிக்க முடியாத பட்சத்தில், சோல்ஜரான விஷால் எப்படித் தான் இழந்த பணத்தை மீட்கிறார் என்பதே படத்தின் கதை. டிஜிட்டல் இந்தியா என ஆசை காட்டுகிறது மோடி அரசாங்கம். அது நிராசையில் தான் முடியுமென மரண பயத்தைக் காட்டியுள்ளார் அறிமுக இயக்குநர் மித்ரன். மிலிட்டரி ஆஃபீசர் பாத்திரத்திற்கு அழகாய்ப் பொருந்துகிறார் விஷால். ஆனாலும், மறைந்திருந்து செயல்படும் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க்கைப் பின் தொடர, சைக்காட்ரிஸ்டான சமந்தாவை அனுப்புவது எல்லாம் ரொம்பவே தமாஷாக உள்ளது. சாமானிய மக்களின் ஆசையைத் தூண்டி, போலி ஆவணங்களை வங்கிக்குக் கொடுக்க வைத்தே அப்பணத்தை அபகரிக்...