Shadow

Tag: ஏ.ஆர்.முருகதாஸ்

#SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

#SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார். ...
ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் ஆக்சன் எண்டர்டெயினர் பூஜையுடன் துவங்கியது

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் ஆக்சன் எண்டர்டெயினர் பூஜையுடன் துவங்கியது

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், யில் உருவாகும் புதிய திரைப்படம்,  ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. ...
தர்பார் விமர்சனம்

தர்பார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முருகதாஸ் இயக்கியிருந்தாலும், இது ரஜினி படமாக மட்டுமே உள்ளது. ரஜினி படம், ரஜினி படமாக இல்லாமல் இருந்தால்தான் ஏமாற்றமளிக்கும். ரஜினி எனர்ஜியாக, ஸ்டைலாக, அழகாகத் தெரிகிறார் திரையில். தர்பார் என்பது அரசவையைக் குறிக்கும். தனது தர்பாருக்கு உட்பட்ட மும்பையைக் காவல் பரிபாலனம் செய்யும் ஐபிஎஸ் அதிகாரியான ஆதித்யா அருணாச்சலத்தின் மகள் கொல்லப்படுகிறார். மரணத்தால் மிகுந்த மனச்சோர்வில் உழலுகிறார். யாரால் அவர் மகள் கொல்லப்பட்டார் என்று கண்டுபிடிப்பதும், எவ்வாறு தன் மகளின் மரணத்திற்குக் காரணமானவரைப் பழிவாங்கினார் என்பதும்தான் படத்தின் கதை. இப்படத்திற்கு, என்கவுன்ட்டர் என்ற தலைப்பு தான் பொருத்தமாய் இருந்திருக்கும். என்கவுன்ட்டரை ஆதரிக்கும் ஆபத்தான போலீஸ் கருவைத் தொட்டுள்ளார் முருகதாஸ். லில்லி எனும் பாத்திரத்தில் நயன்தாரா தோன்றியுள்ளார். உண்மையில் இது நாயகியே தேவையில்லாத படம். நயன்தாரா வரும் காட்சி...
சர்கார் விமர்சனம்

சர்கார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாகப் போட்டு விடுவதால், செக்‌ஷன் 49 P-இன் படி, மீண்டும் சட்டத்தின் உதவியோடு பேலட் ஓட்டைப் போடுகிறார் சுந்தர் ராமசாமி. கள்ள ஓட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் சுந்தரைச் சீண்டி விட, தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார் சுந்தர். செங்கோலினை நிறுவ நல்லதொரு சர்க்கார் அமையவேண்டுமென விரும்புகிறார் சுந்தர் ராமசாமி. செங்கோல் என்றால் நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி. சர்க்கார் என்றால் அரசாங்கம். மக்களுக்கு நல்லது செய்யத் தடையாக இருக்கும் அரசு இயந்திரத்தின் சக்கரங்களான ஆளுங்கட்சியை எப்படி ஓரங்கட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. சினிமா என்பது கனவுத்தேசம்தானே! நல்ல சர்க்காரைத் தன்னால் தான் உருவாக்க முடியுமென்ற ஒரே கனவைப் பலர் காணலாம். கனவு மட்டும் காணாமல் செயலில் இறங்குகிறார் சுந்தர் ர...
ஸ்பைடர் விமர்சனம்

ஸ்பைடர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்கு நடிகரான பிரின்ஸ் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்; படத்தின் பட்ஜெட் 125 கோடி என நீளும் சிறப்புகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருப்பது, இது ஏ.ஆர்.முருகதாஸின் படம். பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கும் ஒற்று (SPY) வேலை செய்கிறார் நாயகன். அப்படிக் கேட்பதில் இருந்து கிடைக்கும் மைனாரிட்டி ரிப்போர்ட்-டினைக் கொண்டு, தவறுகள் நடக்கும் முன் தடுக்கிறார் ஸ்பைடரான நாயகன். இறந்தவர்களினுடைய உறவினர்களும் நண்பர்களும் அழுகின்ற குரல்களைக் கேட்டு ரசிக்கும் சாடிஸ்ட் (sadist) ஒருவனை, ஒற்றேவல் புரிந்து பிடிக்கிறார் ஸ்பைடர். அவன் தீட்டி வைத்திருக்கும் கொடூரமான திட்டங்களை ஸ்பைடர் தடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படம் ஹைதராபாதில் தொடங்கி அங்கேயே முடிகிறது. படத்தின் தொடக்கத்தில், கதாபாத்திரங்களின் உதட்டசைவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆர...
வத்திக்குச்சி விமர்சனம்

வத்திக்குச்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில.." ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் வந்த முதல் படமான தீனாவில் வரும் பாடல் வரிதான் அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக வந்திருக்கும் வத்திக்குச்சி படத்தின் ஒரு வரி கதை. ஏ.டி.எம். வாசலில் சக்தி என்னும் இளைஞனின் கழுத்தில் கத்தி வைத்து பணம் பறிக்கிறது ஒரு கும்பல். இந்த உரசலில் பத்திக் கொள்ளும் நாயகனின் எதிர்வினை தான் படம். சும்மா கொழுந்து விட்டு எரிகிறது. ஆனால் அதனால் எவரும் எரியப்படவில்லை என்பது தான் படத்தின் பிரத்தியேக விசேஷம். நாயகன் சக்தியாக புதுமுகம் திலீபன் நடித்துள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் சாலையில் பார்க்க கூடிய எண்ணற்ற முகங்களில் ஒன்றைப் பெற்றுள்ளார். வாட்டசாட்டமாய் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். வேறு எவரேனும் நடித்திருந்தால், முக்கியமாக முன்னணி நாயகர்கள் யாராவது நடித்திர...
ஏழாம் அறிவு விமர்சனம்

ஏழாம் அறிவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏழாம் அறிவு- ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் படம் இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைகிறார்; கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்று எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு வளர்த்து, கர வருடத்தின் ஐப்பசி 9ஆம் தேதி அன்று வந்த தீபாவளி திருநாளில் வெளியிடப்பட்டது. ஆறாவது அறிவினும் உயர்ந்த அறிவு என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். தனது குருமாதாவால் பணிக்கப்படும் போதி தர்மர் சைனாவில் பரவும் தொற்று நோயைத் தடுக்க பல்லவ நாட்டின் தலைநகரமான காஞ்சியில் இருந்து புறப்படுகிறார். குருமாதாவின் கட்டளையை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களுக்கு தற்காப்புக் கலையையும் பயிற்றுவித்து, அம்மக்களுக்காகவே இறக்கிறார். 1598 வருடங்களுக்குப் பிறகு அவரது மரபணு அமைப்பை இணையத்தில் காணும் சுபா ஸ்ரீனிவாசன், போதி தர்மரின் வாரிசுகள் எவரேனும் காஞ்சியில் வாழக் கூடும் என...