Shadow

Tag: கீரவாணி

சந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆ...
‘சந்திரமுகி 2’  படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள்  வெளியீடு

‘சந்திரமுகி 2’  படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள்  வெளியீடு

சினிமா, திரைத் துளி
லைக்கா புரொடக்ஷன்ஸ்  சார்பில் தயாரிப்பாளர்  சுபாஷ்கரன்  தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி  நட்சத்திர  நடிகருமான  ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக  நடித்திருக்கும்  'சந்திரமுகி 2'  படத்தில்  இடம்பெற்ற 'ஸ்வகதாஞ்சலி...'  எனத்  தொடங்கும்  முதல்  பாடல்  இன்று வெளியானதோடு பாடல் வரிகளுடன் கூடிய  வீடியோவாகவும்  வெளியாகி  இருக்கிறது. இயக்குநர்  பி. வாசு  இயக்கத்தில்  65 ஆவது  படமாக  தயாராகி  வரும் திரைப்படம்  'சந்திரமுகி 2' . இதில்  ராகவா  லாரன்ஸ்,  பாலிவுட்  நடிகை கங்கணா ரனாவத்,  'வைகைப்புயல்'  வடிவேலு,  மகிமா நம்பியார்,  லஷ்மி மேனன்,  சிருஷ்டி  டாங்கே,  ராவ் ரமேஷ்,  விக்னேஷ்,  ரவி மரியா,  சுரேஷ் மேனன்,  சுபிக்ஷா கிருஷ்ணன்  உள்ளிட்ட  பலர்  நடித்திருக்கிறார்கள்  ஆர். டி. ராஜசேகர்  ஒளிப்பதிவு  செய்திருக்கும்  இந்த  திரைப்படத்திற்கு  ஆஸ்கார் விருதினை  வென்ற  இசையமைப்பாளர்  எம். எம்....
சந்திரமுகி 2 – ராகவா லாரன்ஸ் + வடிவேலு

சந்திரமுகி 2 – ராகவா லாரன்ஸ் + வடிவேலு

சினிமா, திரைத் துளி
ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகைப் புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸும் வடிவேலுவும் இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி. வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளைப் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இச...
RRR விமர்சனம்

RRR விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்? ரத்தம் - ரணம் - ரெளத்திரம் பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே ஆச்சரியப்பட வைக்கிறார். 186 நிமிடங்கள் நீள படம் என்பதெல்லாம், இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறை. ஆனால், ராஜமெளலியின் மேஜிக் ஷோவில் நேரம் போவதே தெரியவில்லை. The StoRy - The FiRe - The WateR ...
பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி - தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனி...