Shadow

Tag: சம்யுக்தா

“ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன்” – சாய் தரம் தேஜ்

“ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன்” – சாய் தரம் தேஜ்

இது புதிது
தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் 5 ஆம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'விரூபாக்‌ஷா’. இந்தத் திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, 'காந்தாரா' புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ்ப் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ...
வாத்தி விமர்சனம்

வாத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சோழவரம் அரசுப்பள்ளிக்கு ஒப்புக்குச் சப்பாணியாக அனுப்பி வைக்கப்படுகிறார் கணித ஆசிரியர் பாலமுருகன். ப்ரோமஷனுக்காக ஆசைப்படும் பாலமுருகன், மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடத்திற்குத் தனது சாமர்த்தியத்தால் மாணவர்களை வர வைக்கிறார். பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எப்படி 45 மாணவர்களையும் பள்ளிப் படிப்பை முடிக்க வைக்கிறார் வாத்தி பாலமுருகன் என்பதே படத்தின் கதை. ஷா ராவும், ஹைப்பர் ஆதியும் நகைச்சுவைக்குச் சொற்பமாகவே உதவியுள்ளனர். அவர்களைப் பாதியிலேயே துண்டித்து அனுப்பி விட்டு தனுஷை மட்டுமே முழுமையாக நம்பிக் களமிறங்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் அட்லூரி. தன்னிகெல்லா பரணி, சாய்குமார் முதலிய நடிகர்களும் சாட்சிகளாக வந்து செல்கின்றனரே தவிர்த்து கதைக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத பாத்திரங்களிலேயே நடித்துள்ளனர். ஆசிரியை மீனாக்‌ஷியாக சம்யுக்தா நடித்துள்ளார். பண பலம் பொருந்திய கல்வித்தந்தையான வில்லனை எதிர்க்கு...
களரி விமர்சனம்

களரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
களரி என்பது பழந்தமிழர் தற்காப்புக் கலை. 'போர்க்களம்' என்ற பொருளில் படத்தின் தலைப்பு உபயோகிக்கப்பட்டுள்ளது. மிகத் தைரியமான பெண்ணான தேன்மொழி மீது பாசமாக உள்ளார் பயந்தாங்கொள்ளி அண்ணன் முருகேஷ். தங்கையின் கல்யாணத்திற்காக ஓடியோடி உழைக்கிறார். அன்வரைக் காதலிக்கும் தேன்மொழிக்கு, மூர்த்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மூன்று மாதங்களில், தேன்மொழி தன்னைத் தீயிட்டுக் கொள்கிறாள். ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் முருகேஷ் தன் தங்கையின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்குகிறாளா என்பதுதான் படத்தின் கதை. கொச்சியில் குடியேறிய தமிழர்கள் வசிக்கும் பகுதியான வாதுருத்தி தான் படத்தின் களம். கதாபாத்திரங்கள் அனைவரும் கேரளாவிலேயே பிறந்த தமிழர்கள். நாயகனின் குடிக்காரத் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தவிர்த்து அனைவரும் மலையாளம் கலக்காத தமிழே பேசுகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான செனித் கெலோத...