Shadow

Tag: சோலோ திரைப்படம்

சோலோ இசை – ஒரு பார்வை

சோலோ இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
'வாயை மூடி பேசவும்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் நேரடி மூன்றாவது தமிழ்த் திரைப்படம் "சோலோ". தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அக்டோபர் 5 அன்று உலகெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். சோலோ - ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். இதில் துல்கர், ருத்ரா (பூமி), சிவா (நெருப்பு), சேகர் (நீர்), திரிலோக் (காற்று) என நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு 11 இசையமைப்பாளர்களை பிஜாய் நம்பியார் நாடியுள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. தமிழில் அவர் இயக்கத்தில் வெளியான டேவிட் படத்திலும் இத்தகைய முறையையே கையாண்டார். துல்கரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப "சிவாவின் உலகம்", "சேகரின் உலகம்", "ருத்ராவின் உலகம்" என்று பிரிக்கப்பட்டு பாடல்கள் வெளியிட்டு உள்ளனர். W...
சோலோ – டப்பிங் படம் இல்லை

சோலோ – டப்பிங் படம் இல்லை

சினிமா, திரைச் செய்தி
“இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. முழுக்க முழுக்கத் தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய். இது நேரடி தமிழ்ப்படம் தான். இந்தப் படத்தில் வாய்ப்புக் கிடைக்க அன்சன் பால் தான் காரணம். ரெமோ படத்தில் நடிக்கிறப்பத்தான் அவர் பழக்கம். ஒருநாள், ‘துல்கர ஹீரோவா ஒரு படம் நடிக்கிறார்; பிஜாய் இயக்கிறார்’ எனச் சொல்லிக் கூப்பிட்டார். நான் இதுவரை 40 படத்திலும் ஒரே மாதிரி தான் நடிச்சிருக்கேன். ஆனா, ஒரே படத்திலேயே நாலு டிஃபரன்ட் கெட்டப்ல செமயா நடிச்சிருக்கார் துல்கர். தன்ஷிகாவும் செமயா நடிச்சிருக்காங்க” என்றார் சதீஷ். “ரெமோ படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு ஆடிஷன் போய், இந்தப் படத்துக்குள் வந்தேன். இன்று வரை இந்தப் படத்தோடு மிக நெருக்கமாக இருக்கிறேன். துல்கர், பிஜாய் உடன் அடுத்தடுத்த படங்களிலும் வேலை செய்ய விரும்புகிறேன்” என்றார் நடிகர்...
4 கதாபாத்திரங்களில் ‘சோலோ’ துல்கர்

4 கதாபாத்திரங்களில் ‘சோலோ’ துல்கர்

சினிமா, திரைத் துளி
துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகிறது இப்படம். இந்தப் படத்தைப் பற்றிய அறிமுக விழாவில், இயக்குனர் மணிரத்னமும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். “சோலோ தான் என் முதல் தென்னிந்திய படம். டேவிட் பாதி டப் செய்யப்பட்ட படம். சோலோவைத் தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக படம் பிடித்திருக்கிறோம். நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. இந்தப் படத்தில் 3 ஒளிப்பதிவாளர்களும் 11 இசையமைப்பாளர்களும் பணிபுரிகின்றனர் படத்தில் மொத்தம் 15 பாடல்கள் ” என்றார் இயக்குநர் பிஜாய் நம்பியார். “எனக்கு இதுவரை கிடைத்த படங்கள், இயக்குநர்கள் எல்லாமே நல்லதாகவே அமைந்திருக்கின்றன. நல்ல படங்களை எப்போதுமே கொடுக்க முனைகிறேன். தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் எப்போதும் ஊக்கம் அளிக்கிறார்கள். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு ப...