ஆனா.. எம திருடனுங்க!!
இது தான்டா போலீஸ்!!ஹிஹி.. என்னத்த சொல்ல? புனைவுன்னு வேணுமின்னா வச்சுக்கலாம்.காந்தி சொன்ன மாதிரி இரவுல தனியா பொண்ணுங்க நடந்து போய் அறுபத்து நாலு வருஷத்துக்கு முன்ன சுதந்திரம் வாங்குனது உண்ம தான்னு நிருபிச்சுடுவாங்க போல. ஆனா பசங்களால தான் பகல்ல கூட தைரியமா நடமாட முடியாது போல. ஒவ்வொரு தெரு முக்குக்கும் வெள்ளச் சட்ட போட்ட பணம் பிடுங்கி பூச்சாண்டி 'லிஃப்ட்' கேக்குற மாதிரியே கைய காட்டி உசுர வாங்குறாங்க.ஹெல்மட் போடாமல் போய் அவர்களிடம் சிக்கினால்.. எங்கப்பா காசை நான் வீணா செலவழிச்சு கெட்டுப் போறேன்னு எம்மேல இருக்கிற அக்கறையில் காசைப் பிடுங்கி வச்சுக்கிறாங்க. மாமாக்கு தான் என் மேல எவ்ளோ அக்கறை!? நான் ப்ரென்ட்ச எல்லாம் மாமான்னு தான்னு கூப்பிடுவேன். நீங்க பாஸூ!? அதான் 'போலீஸ் உங்கள் நண்பன்'னு விவேக் ஏதோ படத்துல சொல்வாரே!! அத பாத்ததில் இருந்து தான்.எல்லா டாக்குமென்ட்சும...