Tag: ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி
தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி, நவம்பர் 2 முதல் 8 வரை சென்னை லலித் கலா அகாடெமியில் நடக்கவுள்ளது.
தமிழர்களின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகரும் இயக்குநருமான கமலஹாசன் இன்று காலை 10:30 மணி அளவில் திறந்து வைத்தார்.
J.சுரேஷ் எனும் புகைப்பட நிருபரின் முயற்சியால் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்துறையில் 23 வருடங்கள் அனுபவம் கொண்ட அவர், புகைப்படத்துறை சம்பந்தமான பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிட்த்தக்கது.
தமிழரின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் இந்தக் கண்காட்சியை வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் நிச்சயமாகக் காண வேண்டும்....
டுர்ர்ர்ரீ
படிக்கிறோமோ இல்லையோ.. புக் ஷாப்பிற்கு போனா சும்மாவாச்சும் ஒரு புக் வாங்கணும்னு தோணும். அன்னிக்கும் அப்படித் தான். கையில காசும் அதிகமா இல்ல. குட்டிப் போட்ட பூனையாட்டும் சுத்திட்டிருந்த தினேஷின் தோளைப் பிடிச்சிழுத்து, "நல்ல புக் ஒன்னு சொல்லுடா?" என என் பட்ஜெட்டையும் சொன்னேன். அவன் யோசிக்காம, "வாடிவாசல்" என்றான்."வாடி வாசலா?""செம புக். சூப்பரா இருக்கும். ஜல்லிக்கட்டு பத்தி புக்.""உன்கிட்ட இருக்கா?""இல்ல. மிஸ் பண்ணாம வாங்கிடு. ரொம்ப நல்லா இருக்கும்னு எல்லாம் சொன்னாங்க.""அட வெண்ண. படிக்காமலே இவ்ளோ பில்டப்பா? உன்ன போய் கேட்டேன் பாரு" என்று நான் சொல்றத காதில் வாங்காம, ஷெல்ஃபில் தேடி எடுத்து புக்கை கையில் கொடுத்துட்டான். சின்ன புக். 50 ரூபாய் தான். ஆனா முதல் பதிப்பு 1959ன்னு போட்டிருந்துச்சு. புரியுமான்னு சந்தேகம் வந்துச்சு. சரி போய் தொலையட்டும் என ஒன்னும் சொல்லாம...