Shadow

Tag: ஞாநி

தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

சினிமா, புத்தகம்
தமிழ்த் திரைப்பட உலகின் பவழ விழா ஆண்டு 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அக்டோபர் 31, 1931 இல், தமிழின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியானது. அன்றிலிருந்து, தமிழ் சினிமாவில் முதன் முதலாக நிகழ்ந்த சிறப்புகளைத் தொகுத்து, 'தமிழ் சினிமாவின் முதல்வர்கள்' என்ற புத்தகத்தை 2006 இல் எழுதியுள்ளார் திரைப்படப் பத்திரிகை தொடர்பாளரான பெரு.துளசி பழனிவேல். மொத்தம் 28 சிறப்புமிகு படங்களைப் பற்றிச் சுருக்கமாக தந்துள்ளார். இப்புத்தகம், திரைப்படப் பிரியர்களுக்கான ஒரு பொக்கிஷச் சேமிப்பு. காதலையும், தமிழ்ப்படங்களையும் பிரிக்கவே முடியாதோ என்று கதி கலங்கும்படி, வசவசவெனக் காதல் படங்களை உருவாக்கித் தள்ளுகின்றது தமிழ்த் திரைப்பட உலகம். அலுக்கவே அலுக்காமல் தமிழ்த் திரையுலகம் காதல் படங்களை எடுப்பதும், எங்களுக்குச் சலிக்கவே சலிக்காதெனப் பார்வையாளர்கள் அவற்றைக் கொண்டாடுவதும் ஒரு தொடர் கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு,...
ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

கட்டுரை, சினிமா
மு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன் ஒரு படம் எடுத்து வெளியிடுவது என்பது பிரசவ வேதனை மாதிரி. தயாரிப்பாளர்கள் காலில் விழுந்து கிடக்கணும். ஏன்னா இங்க பணம் இன்வால்வ் ஆகுது. தாகூர், கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார். ‘இறைவா.. என்னைவிட பலவீனமான ஆட்களிடம் மண்டியிட வைத்திடாதே!’ என. அப்படித்தான் நினைச்சுப்பேன். அப்படி இருக்கு இங்க இயக்குநரின் நிலைமை. நான் ‘மோக முள்’ படமெடுக்கிறப்ப, திருச்சூர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டராக இருந்தேன். லைட்-மேன் என்னை அனுதாபமாகப் பார்த்து, ‘பார்றா இவர!’ என ஏளனம் பண்றார். அவங்களைத் தப்பு சொல்ல முடியாது. ஏன்னா அவங்கதான், சின்ன படத்திலிருந்து ரஜினி படம்வரை வொர்க் பண்ணும் ஒரே ஆளுங்க. ஒரே விஷயத்தைச் செய்து பழக்கப்பட்டுட்டாங்க. நானோ off-beat சினிமா எடுக்கிறேன். ஆனா இங்க அனைவரையும் அவங்க வழக்கத்திற்கு இழுத்து, குதிரையை கழுதையா ஆக்கப் பார்க்கிறாங்க. ‘ந...
ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

கட்டுரை, மற்றவை
ஞாநி - சாதியை ஒழிக்க சாதி கலப்பு திருமணங்கள் அவசியம் என அம்பேத்கார் சொல்கிறாரே!!எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை. கேட்டா காதலுங்கிறான். இவம் பண்றது காதலா? இழுத்துட்டு இல்ல ஓடுறான்! இருவர் இணைந்து வாழ்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இவங்க காதல்னு சொல்றதெல்லாம் ஒரு infatuation. மெச்சூரிட்டி இல்லாதவங்களா இருக்காங்க. நான் வயதை சொல்லல. Internal maturity-யைச் சொல்றேன். பரஸ்பரம் புரிந்து கொண்டு வர்ற காதலை நான் சொல்லல. கண்டிப்பா அதை அனைத்துத் தடைகளையும் எதிர்த்து சேர்த்து வைக்கணும். ஆனா அப்படிப்பட்டவர்கள் மிகவும் சிலரே. புதுமைப்பித்தன் கூட ஒரு கதையில் எழுதி இருப்பாரே!! குடிச்சுட்டு கிடப்பாங்களே. அப்படித்தான் ஆகிடும்.நல்லா படிச்சேன். ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸாயிட்டேன். ஆனா வேலை கிடைக்கல. வேலைக்காக ஹிண்டு பேப்பர்லாம் பார்த்துட்டிருப்பேன். 'என்ன அப்ளை பண்ணிட்டியான்னு?' என நண்பர் ஒருவர் க...