
ஹவுஸ்மேட்ஸ் விமர்சனம் | Housemates review
காதலிக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்வதற்காகத் தர்ஷன் வேளச்சேரியில் ஒரு வீட்டை வாங்குகிறார். கணவன் மனைவியாகக் குடியேறியது முதலே அமானுஷ்யமான சம்பவங்கள் அவ்வீட்டில் நிகழ்கின்றன. 2022 ஆம் ஆண்டில் மனைவியுடன் வசிக்கும் தர்ஷன் அவர் வீட்டில் சுவிட்ச் போட்டால், 2012 இல் அதே வீட்டில் வாழும் காளி வெங்கட்டின் வீட்டில் லைட் எரியும். காளி வெங்கட் வீட்டில் ஃபேன் போட்டால், தர்ஷன் வீட்டில் ஃபேன் சுற்றும். இந்த இடியாப்பக் குழப்பம் ஏன் ஏற்பட்டது, எப்படி இக்குழப்பத்தால் இரு குடும்பமும் பாதிக்கப்படுகின்றனர், அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் கலகலப்பான எமோஷ்னலான கதை.
காளி வெங்கட்டின் மகனாக நடித்துள்ள மாஸ்டர் ஹென்ரிக், ஒரு க்யூட்னெஸைப் படத்திற்குக் கொண்டு வந்துள்ளான். தங்கள் வீட்டில் பேய் உள்ளதென நிரூபிக்க அவன் மேற்கொள்ளும் ஒரு சிறிய சோதனையில் வெற்றி பெற்றதும், அவன் அடையும் மகிழ்ச்சி ரசிக்க வைக்...








