Shadow

Tag: பாண்டிராஜ்

எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸின் ‘அயலி’ வெற்றிப் பகிர்வு

எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸின் ‘அயலி’ வெற்றிப் பகிர்வு

இது புதிது
அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த 'அயலி' என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான ஒரு தொடராக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடர் இணைய வழியை நோக்கி வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததே இந்தச் சிறப்புக்குக் காரணம். இத்தொடர் ஜீ5 தமிழில் வெளியானது. தயாரிப்பாளர் எஸ். குஷ்மாவதி என்கிற பெண்மணி இதைத் தனது 'எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸ் (Estrella stories)’ நிறுவனத்தின் சார்பில...
“இதயம் சொல்வதைக் கேளுங்கள்” – சூர்யா

“இதயம் சொல்வதைக் கேளுங்கள்” – சூர்யா

சினிமா, திரைச் செய்தி
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், வினய், சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி. இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், ''சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின...
நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், உடனே காதலில் விழுந்து, அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்து லவ் டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டு, அரும்பொன் எனும் நல்ல பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நேர்மாறான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரே ஆசுவாசம் இதுதான். சுற்றம் சூழ வாழ்ந்தாலும், அரும்பொன்னின் குடும்பத்தைத் தகுதி, தராதரம் பார்த்து ஒதுக்கி வைக்கின்றனர் அவனது நெருங்கிய உறவினர். அத்தகைய உறவினர்களின் வீட்டுப் பிள்ளையாக, அரும்பொன் எப்படி மாறுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. நடிகர் பட்டாளம் நிரம்பிய திருவிழா கோலமாக உள்ளது படத்தின் முதற்பாதி. இன்னார் இன்னின்ன சொந்தங்கள் எனச் சொல்லி முடிப்பதற்கே முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார் பாண்டிராஜ். கதையின் ஊடாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த முயலாமல், அதைப் பாட்டாகவே ...
ஒரே நேரத்தில் 12 படங்கள் – செம ஜீ.வி.

ஒரே நேரத்தில் 12 படங்கள் – செம ஜீ.வி.

சினிமா, திரைச் செய்தி
பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் 'செம'. படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார். “இயக்குநர் வள்ளிகாந்த் ஒரு காட்சிக்கு 40 டேக் வரை பொறுமையாக எடுப்பார். டப்பிங்கிலும் சரி, ஷூட்டிங்கிலும் சரி அவரைத் திருப்திப்படுத்தவே முடியாது. பாண்டிராஜ் பட்டறையில் இருந்து நிறைய இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். அப்படி இந்த வள்ளிகாந்தும் நல்ல இயக்குநராக வருவார்” என்றார் நடிகர் மன்சூர் அலிகான். “வள்ளிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் முகத்துக்கு நேரே சொல்லுபவன், அது தான் அவனை என் உதவியாளராக நான் சேர்த்துக் கொள்ள முக்கிய காரணம். என்னிடம் நிறைய திட்டு வாங்கிய உதவி இயக்குநரும் அவன் தான். அவனுக்கு என்ன செய்வது என யோசித்துத்தான் இந்தப் படத்தை தயாரித்தேன். ஒரு படம...
இது நம்ம ஆளு விமர்சனம்

இது நம்ம ஆளு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிவாவிற்கு காதல் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவனால் ‘தன்னுடைய ஆள்’ எனக் காதலிக்க ஒருவரையும் தீர்மானம் செய்து கொள்ள முடியவில்லை. அவரது காதலின் ஸ்டார்ட்டிங் நல்லாயிருந்தாலும் ஃபினிஷிங்கில் சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது. சிவா தன்னுடைய ஆளைக் கண்டடைந்தானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ‘எனக்கு லவ் பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும்’ என்ற ஒற்றைப் பரிமாணக் கதைக் கருவை எடுத்துக் கொண்டு பேசிப் பேசியே மாய்கின்றனர் கதாபாத்திரங்கள். சூரி: அந்தப் பொண்ண பார்த்ததுமே உனக்குப் புடிச்சிப் போனதுக்கு என்ன காரணம் தெரியுமா? சிம்பு: என்ன? சூரி: ஒன்னு உன்னோட பருவம். இன்னொன்னு அந்த பொண்ணோட புருவம். நயன்தாராவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ஒரே மாதிரியான புருவங்கள் என்பதால் நயன்தாராவைப் பார்த்ததுமே சிலம்பரசனுக்குப் பிடித்துப் போய் விடுகிறதாம். அப்படின்னு சூரி சொல்றார். இப்படி இலக்கற்ற கதைப் போக்கினாலும், கடியான வசன...
கதகளி விமர்சனம்

கதகளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடலூர் மீனவர்களின் தலைவன் தம்பாவைக் கொன்ற பழி, அமுதவேல் மீது வந்து சேருகிறது. அந்தப் பழியால் அமுதவேலின் குடும்பத்திற்கு என்ன நேர்கிறதென்றும், அதிலிருந்து மீள அமுதவேல் எப்படி கதகளி ஆடுகிறான் என்பதும் தான் படத்தின் கதை. 'கதகளி ஆடுதல்' - சக்தியையோ வலிமையையோ நிரூபித்தல் என்று தலைப்பினை பொருள் கொள்ளலாம். வழக்கமான நாயகன், நாயகி, வில்லன் தான் எனினும் பாண்டிராஜின் திரைக்கதையில் படம் சுவாரசியம் பெறுகிறது. குறிப்பாக, இன்ஸ்பெக்டர் சரவண வடிவேலாக நடித்திருக்கும் ஸ்ரீஜித் ரவியின் ஆர்ப்பாட்டமற்ற குயக்தி அதிரச் செய்கிறது. அதிகாரம் தவறான நபரின் கையில் கிடைத்தால் என்னாகுமென அழுத்தமாகப் பதிந்துள்ளார் பாண்டிராஜ். பசங்க – 2 ஏற்படுத்திய தாக்கம் மறையும் முன், முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையில் கையெடுத்து அற்புதமான த்ரில்லரைக் கொடுத்துள்ளார். ஹிப்-ஹாப் தமிழாவின் பின்னணி இசை அதற்கு உதவுகிறது. அமுதவேலாக விஷால். ச...
பசங்க – 2 விமர்சனம்

பசங்க – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னைத் தானே அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற குழந்தைகளையும் மன அழுத்தத்திற்குத் தள்ளும் பெற்றோர்களுக்கான படமிது. தங்கள் உலகத்திற்குள் சிறுவர்களை இழுக்க நினைக்கும் பெற்றோர்களிடம், குழந்தைகள் உலகத்தை அறிமுகம் செய்கிறது பசங்க-2. நற்சாந்துபட்டியில், ஒரு விளையாட்டு மைதானத்தில் படம் தொடங்குகிறது. அங்கேயே படம் முடிந்தும் விடுகிறது. அக்காட்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மூலம் பேசத் தொடங்கும் பாண்டிராஜ், படம் முழுவதும் பெற்றோர்களிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கிறார். சிறுவன் நிஷேஷும், சிறுமி வைஷ்ணவியும் அதகளப்படுத்தியுள்ளனர். கத்தி மேல் நடந்திருக்கும் பாண்டிராஜைப் பத்திரமாக கரை சேர்த்துள்ளனர். இச்சிறுவர்கள் மட்டுமல்ல, மருத்துவர் தமிழ் நாடனாக வரும் சூர்யா, ஆசிரியை வெண்பாவாக வரும் அழகான அமலா பால், கவினின் பெற்றோர்களாக வரும் ராம்தாஸும் வித்யாவும், நயனாவின் ...