Shadow

Tag: பிக் பாஸ் தர்ஷன்

பிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே!

பிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே!

பிக் பாஸ்
தர்ஷன் சனி மாலை வாக்கில் இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த போது முதலில் நம்பவே இல்லை. 'ச்சேச்சே, தர்ஷனாவது, எவிக்சனாவது!' என்று தான் . ஆனால் நேரமாக ஆக, எல்லா இடத்தில் இருந்தும் இந்தத் தகவல் வரவும், ரொம்பம் சோர்வாக இருந்தது. எவ்வளவோ முயற்சி பண்ணியும், நேர்மையாய் இருந்தும், தகுதி இருந்தும், திறமை இருந்தும், நமக்குக் கிடைக்க வேண்டிய ஒரு வாய்ப்பு, கைநழுவிப் போகும் போது, 'என்னடா வாழ்க்கை இது?' எனத் தோன்றுமே, அப்படியொரு மனநிலை தான் நேற்று இருந்தது. இன்னொருத்தருக்கு வாய்ப்பு பறிபோனதற்காக வருத்தப்பட்டது, இதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்துள்ளதா எனத் தெரியவில்லை. நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு மனநிலை. நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பிக்கும் போது, மனம் கொஞ்சம் சாதாரணமாகத் தான் இருந்தது. தெரிந்தது தானே எனக் கொஞ்சம் அசால்டாகத் தான் இருந்தேன். ரொம்ப ட்ராமா செய்யாமல் தர்ஷனை வெளியே கூட்டிக் கொண்டு வந்த கம...
பிக் பாஸ் 3: நாள் 92 | கவினை ஏன் யூத்களுக்குப் பிடிக்கிறது?

பிக் பாஸ் 3: நாள் 92 | கவினை ஏன் யூத்களுக்குப் பிடிக்கிறது?

பிக் பாஸ்
கவினை இத்தனை பேர் வெறுக்கிறதுக்கு காரணம் தான் என்ன? இந்த சீசன் ஆரம்பித்த முதல் சில வாரங்கள் கடந்ததுக்கு அப்புறம் கவின்-சாண்டி கூட்டணி தான் செம்ம ஹிட். பாடல் வரிகளை மாற்றிப் போட்டுப் பாடி, செம்ம ஜாலியாக இருந்தார். பார்க்கிறதுக்கும் நல்லாருந்தது. அதற்கப்புறம் தான் சாக்‌ஷியோட ஒரு லவ் எபிசோட் ஓடியது. அப்பவும் யாரும் வெறுக்கவில்லை. அதெப்படி ஒரே வாரத்தில் காதல் வருமெனக் கேட்டவர்கள் கூட, அந்த எபிசோட்ஸை என்ஜாய் பண்ணிருப்பார்கள். அப்புறம் தான் பாய்ஸ் டீம் உருவானது. அப்பவும், தினசரி அத்தியாயத்தில் ஸ்ட்ரெஸ் பஸ்ட்ரே பாய்ஸ் டீம் தான். ஒரு பக்கம் சாண்டி அல்டிமேட் எண்டர்னெயினராக இருக்க, இன்னொரு பக்கம், எவிக்சன் வந்தா பாட்டு பாடி அனுப்பி ஜாலி பண்ணிட்டு இருந்தார்கள். அதற்கப்புறம் தான் கவின் பாதையில் லாஸ்லியா வருகிறார். சாக்‌ஷி கூட ஒரு ட்ராக் ஓடிக்கொண்டு இருக்கும் போதே, இந்தப் பக்கம் லாஸ் கூட இன்னொரு ட்ர...
பிக் பாஸ் 3: நாள் 66 | பிக் பாஸ் – சர்வம் நாடகமயம்

பிக் பாஸ் 3: நாள் 66 | பிக் பாஸ் – சர்வம் நாடகமயம்

பிக் பாஸ்
காக்கிச்சட்டை பாடலுடன் தொடங்கியது நாள். கிராமத்து எஃபெக்ட்டாம். என்னவோ ஆடிக் கொண்டிருந்தனர். காலையிலேயே கவின் தன் வேலையை ஆரம்பித்திருந்தான். லாஸிடம், ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு இன்னொரு ரிலேஷன் ஷிப் இருந்தது, அது ப்ரேக் ஆகிவிட்டது எனச் சொன்னதை கேட்டு லாஸ் முகத்தில் ஈயாடவில்லை. அது ரொம்ப சீரியஸ் & காம்ப்ளிகேட்டட் என சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார். அதே சீரியஸ் முகத்தோடு கேட்டுக் கொண்டார் லாஸ். ‘எதுவாக இருந்தாலும் வெளியே போய் பேசிக்கலாம்’ என லாஸ் சொல்ல, கவின் முகத்தில் 1000 வாட்ஸ் பிரகாசம். சரி இப்ப எதற்கு இதைச் சொல்லவேண்டும்? ஒருவேளை இப்பத்தான் ஞாபகம் வந்திருக்குமோ? சாக்ஷியிடம் கல்யாணம் வரைக்கும் பேசிய பொழுதும் இதைச் சொல்லவில்லை. லாஸிடம் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தே கிட்டத்தட்ட 3 வாரம் ஆகிவிட்டது. இப்ப வந்து, அதுவும் ஒரு டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் போது...
பிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்!’ – மகிழ்ச்சியில் சேரன்

பிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்!’ – மகிழ்ச்சியில் சேரன்

பிக் பாஸ்
புதுப்பேட்டை படத்தில் இருந்து, ‘வர்றியா வர்றியா’ பாடலுடன் தொடங்கியது நாள். சாண்டியின் தயவில் பாய்ஸ் டீம் பட்டையை கிளப்பினார்கள். காலை உணவுக்கு கெலாக்ஸ் மாதிரி ஏதோ பண்ணிருப்பார்கள் போல். அதை வைத்து எல்லோரும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தனர். சாப்பிட முடியாத அளவுக்கு செய்த புண்ணியவதி யாரு என்று தெரியவில்லை. வேறு யாராவது இருந்தால் இதை வைத்தே ஒரு பஞ்சாயத்து கிளம்பியிருக்கும். க்ளீனிங் டீமில் இருந்த தர்ஷனை சீண்டிக் கொண்டிருந்தார் ஷெரின். தர்ஷனும் சும்மா கலாய்த்துக் கொண்டிருந்தார். தர்ஷன் சொடக்கு போட்டுக் கூப்பிட்டதில் டென்சனாகி விட்டார் டார்லிங். சேரன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அடுத்த கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது. போட்டியாளார்களை மீதி இருக்கிறவர்கள் சேர்ந்து கேப்டனைத் தேர்ந்தெடுக்கின்ற மாதிரியான கேம். ஒரு பவுலில் இருந்து சீட்டு எடுக்கவேண்டும். யார் பேர் அதிகம் வருகின்றதோ அ...
பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

பிக் பாஸ்
கோமாளி பாடலுடன் தொடங்கியது நாள். மொக்கை கதை சொல்வது தான் டாஸ்க்காம். கஸ்தூரி மொக்கை பண்றேன் பேர்வழி என ஷெரினை அழவைக்க, மற்ற எல்லோருமே டென்ஷன் ஆனார்கள். நேற்று, தர்ஷனிடம் சொன்ன மாதிரி கவினைக் கூப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் சேரன். எதற்கு இவருக்கு இந்த வேலை எனத் தோன்றியது. ஏனெனில் இவர் என்ன சொல்வார், அதை அவர்கள் எப்படி எடுத்துப்பார்கள் எனத் தெரியவில்லை. இருக்கின்ற பிரச்சினையில் புதிதாக வேற வரவேண்டுமா என்று யோசனை போனது. ஆனால் சேரன் அந்தச் சூழ்நிலையை ஹேண்டில் செய்த விதம் அற்புதம். நிதானமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, இவர் நமக்கு அட்வைஸ் செய்கிறார் என்ற உணர்வே வராமல், ஒரு உரையாடலாகக் கொண்டு போன விதம் அட்டகாசம். அவரே சொன்ன மாதிரி ரொம்ப நாளா பேச வேண்டுமென நினைத்து, முன் தயாரிப்போடு பேசியது தான். ஆனாலும் கவின் - சாக்‌ஷி பிரச்சினை பெரிதாகும் போது, அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையாக கையாண்டிருக்க...
பிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு!’ – தர்ஷன்

பிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு!’ – தர்ஷன்

பிக் பாஸ்
  ஜனகனமன பாடலுடன் ஆரம்பித்தது நாள். சுதந்திர தினம் கொண்டாடுகிறார்களாம். கிச்சனில் சேரனுக்கும், மதுவுக்கும் விபூதி அடித்துக் கொண்டிருந்தார் வனிதா. அதைக் கேட்டுவிட்டுப் போன லாஸ் வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்த பாய்ஸ் அணியிடம் சொல்கிறார். 'இது தெரிந்த விஷயம் தானே!' என பாய்ஸ் டீம் சொல்ல, 'என்னையும் இப்படி மாத்திட்டாங்களே!' என லாஸ் சொன்னது ஆச்சரியம் தான். லாஸ் யாரைப் பற்றியும் பின்னாடி பேசுவது இல்லை. இப்ப அதையும் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். இந்தக் கூட்டணி கிடைத்ததற்குப் பிறகு, லாஸ் நல்ல கான்ஃபிடென்ட்டாக இருக்கார். அநேகமாக தர்ஷன் தான் லாஸை உள்ள கூட்டிக் கொண்டு வந்திருப்பார் என நினைக்கிறேன். சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கிறதாலல், இப்ப தான் மற்றவர்கள் பிரச்சினைக்கு லாஸோட குரல் வெளியே வருகிறது. 'எத்தனை நாளைக்கு?' எனப் பார்க்கலாம். வெளியே நடக்கிறதைப் பற்றி ஹவுஸ்மேட்ஸ்க்கு சொல்லிக் கொண்டிருந...
பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

பிக் பாஸ்
'யாரடி நீ மோகினி' பாடலுடன் தொடங்கியது நாள். கஸ்தூரி கெட்ட ஆட்டம் போட்டார். காலங்கார்த்தாலேயே இப்படி. கடவுளே! கடவுளே! மன்னராட்சியில் குறைகளைக் களைவதற்குத் தர்பார் கூடியது. புதியதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்காரரைப் போல் தன் ஆட்சியில் கிடைத்த பலன்களைப் பட்டியிலிட்டுக் கொண்டிருந்தார். மன்னரும் அமைச்சரும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வருவதே இல்லை என்று மன்னரின் மீதே பிராது கொடுத்தனர் மக்கள். விரைவில் குறை தீர்க்கப்படும் என்று உறுதி கொடுத்தார் மன்னர். கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்பில் கூட ஸ்கோர் செய்வதால் தான் சாண்டியை எல்லோருக்கும் பிடிக்குது. இன்னிக்கும் மன்னர் வேஷத்துக்கு இருக்கின்ற ப்ராபர்ட்டீஸை வைத்து, ஒரு அட்டகாசமான அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணிருந்தார். ஹாட்ஸ் ஆப் சாண்டி & டீம். காலையிலேயே முகின் மூட் அவுட்டாக இருந்தார். அபியிடம் பேசவில்லை போல. சாப்பிட வந்த போதும் ஒரு வார்த்தையில் பத...
பிக் பாஸ் 3: நாள் 48 – ‘கை எப்படியிருக்கு முகின்?’

பிக் பாஸ் 3: நாள் 48 – ‘கை எப்படியிருக்கு முகின்?’

பிக் பாஸ்
ஆர்பாட்டமில்லாத கமலின் என்ட்ரியோடு டொடங்கியது. தன் ட்ரேட் மார்க் அறிமுக உரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்குக் கூட்டிச் சென்றார். மேயாத மான் பாடலுடன் தொடங்கிய நாளில் அந்தப் பாட்டுக்கு ஆடச்சொன்னால், எல்ல்/ஓரும் அவங்க பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். சாண்டி எழுந்து வந்து ஸ்டெப் சொல்லிக் கொடுக்கும் போது பாட்டே முடிந்து விட்டிருந்தது. ஷெரினின் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சாக்ஷி அவரை டார்ச்சர் பண்ணியுள்ளார். அதை வருத்தத்டுடன் பதிவு பண்ணினார் ஷெரின். ‘ஆனால், சாக்ஷியே, இந்த நாளை உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ, நாளைக்கே நீ வெளியே போனாலும், முதல் ஆளா கண்ணீர் விடறதும், உண்மையா வருத்தப்படறதும் ஷெரின் மட்டும் தான். இதை நீ உணரும் போது ஷெரின் உன் பக்கத்துல இருக்க மாட்டார்’ என என் மைன்ட் வாய்ஸை இங்கே பதிந்து கொள்கிறேன். சேரன் சாக்ஷிக்காகப் பேசினார். இருந்தும் தலைவி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இந...