Shadow

Tag: ரம்யா நம்பீசன்

மை டியர் பூதம் விமர்சனம்

மை டியர் பூதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளுக்கான படம். பிரபு தேவா பூதமாக நடிக்க, பூதத்தை விடுவிக்கும் சிறுவனாக அஷ்வந்த நடித்துள்ளான். அஷ்வந்திற்கு ஒரு விபத்தில் திக்குவாய் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் கிண்டல்களுக்கு உள்ளாகும் நிலையில், சமணர் மலை அருகில் ஒரு பொம்மையில் அடைப்பட்டு இருக்கும் சிலையில் இருந்து கர்கிமுகி எனும் பூதத்தை விடுவிக்கிறான். சாபம் பெற்று பொம்மையாய் மாறிய பூதம், விடுபட்டதிலிருந்து 48வது நாளில், அஷ்வந்த் மந்திரம் சொன்னால் மட்டுமே, பூதத்தால் தன் சொந்த கிரகத்திற்குச் செல்ல முடியும். ஆனால், பூதமே அந்த உதவியை அஷ்வந்திடம் கேட்கக் கூடாது. அஷ்வந்தாகச் செய்யவேண்டும். அதெப்படி சாத்தியமானது என்பதே படத்தின் கதை. குழந்தைகளைக் கவரும் வகையில் வி.எஃப்.எக்ஸில் அசத்தியுள்ளனர் A.M.T. மீடியா டெக். வீஸ்வரூபத்தில் இருக்கும் பூதம், சுவரிலுள்ள சோட்டா பீம் போஸ்டரில் இருந்து லட்டை எடுத்துச் சாப்பிடும் பூதம், டாம் & செர்ர...
பிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு

பிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் அரங்கில் 11 மார்ச் அன்று நடைபெற்றது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை, பாசிடிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் சார்பாக ராஜேஷ் குமாரும், L.சிந்தனும் தயாரித்துள்ளனர். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், “இப்படத்தின் ஷூட்டிங்கை மிகக் குறைந்த காலத்தில் முடித்துள்ளோம். ஒட்டுமொத்த குழுவின் உதவியில்லாமல் இது சாத்தியமில்லை. படத்தில் 18 ஆர்டிஸ்ட் உள்ளனர். அவர்களது ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமாயிற்று. அற்புதமான பாடல்களை அளித்துள்ள யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு நன்றி. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ரியோ ராஜை அறிமுகம் செய்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படத்தைப் பார்த்துதான், ரியோ ராஜ் இந்த கேரக்டரின் எமோஷன்ஸைச் சுமக்கக்கூடிய நடிகர் என்பதைத் ஹெரிந்து கொண்டேன்” ...
நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்

நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிவா, ராஜா, மணி ஆகியோர் 'தளபதி' படத்தின் வெளியீட்டு நாள் அன்று ஒரே மருத்துவமனையில் பிறந்த ரத்தம் சதையுமான நண்பர்கள். இதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த, 'ஒரே வயிற்றில் பிறந்தா ட்வின்ஸ், ஒரே நாளில் பிறந்தால் ஃப்ரெண்ட்ஸ்' என நாயகன் கவினை வாய்ஸ்-ஓவர் மூலம் சொல்ல விடுகிறார் இயக்குநர். 'ஆஹா! தொடக்கமே அற்புதம்' எனப் புல்லரித்து விடுகிறது. மூன்று நண்பர்களுமே, ஸ்ருதி எனும் பெண்ணைக் காதலிக்கிறார்கள். நட்புக்குள் சத்திய சோதனை உருவாகிறது. சோதனையில் இருந்து நண்பர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ரம்யா நம்பீசனை மிகத் தைரியமான பெண்ணாக அறிமுகம் செய்கின்றனர். அதன் பின், வழக்கமான சினிமா ஹீரோயினாக்கி விடுகின்றனர். படம் முடிந்ததும், படக்குழுவினர் பெயர் மேலெழும் பொழுது, கவினை முன் வைத்து ரம்யா நம்பீசனுக்கும், இளவரசுக்கும் நடக்கும் உரையாடல் கூட ரசிக்கவைக்கின்றன. எந்த நோக்கமுமற்ற வேலையில்லா ...
சத்யா விமர்சனம்

சத்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1988 இல் வந்த கமல் படத்திற்கும், இப்படத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; படத்தின் நாயகன் பெயர் சத்யா என்பதைத் தவிர்த்து. தெலுங்குத் திரையுலகில், 2016இன் தொடக்கத்தில் வெளிவந்த 'க்ஷணம்' என்ற வெற்றிப்படத்தின் தமிழ் ரீமேக்கே இந்த "சத்யா" படம். ஆஸ்திரேலியாவில் பணி புரியும் சத்யாவிற்குத் தன் முன்னாள் காதலியான ஸ்வேதாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அவளைப் பார்க்கச் சென்னை செல்றான் சத்யா. தன் மகளைக் காணவில்லை என்றும், தேடித் தரும்படியும் சத்யாவைக் கேட்கிறாள் ஸ்வேதா. அப்படியொரு மகளே ஸ்வேதாவிற்கு இல்லையெனக் காவல்துறையினரும், ஸ்வேதாவின் கணவனும் திட்டவிட்டமாகச் சொல்லிவிட, அடுத்து என்னாகிறது என்பதுதான் படத்தின் த்ரில்லிங் கதை. சதீஷைக் காமெடியனாக ஏற்றுக் கொள்வதிலேயே மனத்தடை விலகாத பட்சத்தில், அவரைச் சீரியசான பாத்திரத்தில் நடித்திருப்பதை உள்வாங்கிக் கொள்ள சிரமமாய் உள்ளது. ஆனால், தலையும் புர...
சேதுபதி விமர்சனம்

சேதுபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'போலிஸ் வேலை தான் கெத்து. யாரையும் அடிக்கலாம்' என்பான் நானும் ரெளடிதான் பாண்டி. அதே போலொரு ஆள் தான் சேதுபதியும். பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நியாய தர்மங்கள் மட்டுமே சரியென்று நம்பி, அதைப் பிடிவாதமாகக் கடைபிடிக்கும் நல்ல (!?) போலிஸ். அது எத்தகைய தர்மம் என்றால்? எய்தவனுக்கு நீதிமன்றம், எய்யப்படும் அடியாட்களுக்கு எவ்விதக் கேள்வியுமின்றி என்கவுண்ட்டர் என்பதே அது. அப்படியான தர்மத்தை வழுவாத நேர்மையான போலிஸ் சேதுபதி. பாதிக்கப்பட்டோரைக் கண்டால் மனம் இரங்கும் ஈரமனசுக்காரர். இப்படிப்பட்டவரை உரண்டைக்கு இழுத்து படாதபாடுபடுகிறார் Dr.வாத்தியார். வாத்தியாராக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தமிழ் சினிமா பலமுறை கண்டுவிட்ட மிகக் கொடுமையான வில்லன். கதாபாத்திரத்திற்கேற்ற தோரணையான நடிகரெனினும், அசுவாரசியமற்ற கதாபாத்திர வடிவமைப்பால் பொலிவிழுந்து போகிறார். ஒரு போலிஸ்காரரை எரித்துக் கொன்றுவிட்டு,...