Shadow

Tag: ரித்திகா சிங்

கொலை விமர்சனம்

கொலை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி K. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொலை. பிரபல மாடலும் பாடகியுமான லைலா என்னும் பெண் பூட்டப்பட்ட தன் வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அவளை கொன்றது யார் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் படலம் தான் இந்தக் கொலை. இயக்குநர் பாலாஜி K. குமாரின் முந்தைய படமான ‘விடியும் முன்’ திரைப்படமே அது உருவாக்கப்பட்ட விதத்திலும், அதில் பயன்படுத்தப்பட்ட ஒளிக் கீற்றுகள், வண்ணங்கள் ஆகியவற்றின் பலத்தினாலும் இந்திய வரைவியலுக்கு உட்பட்ட கதைக்களமான நிலத்தை ஹாலிவுட் காட்சியமைப்போடு காட்டி மிரட்டியதற்காக வெகுவாக பாராட்டும் வரவேற்பும் பெற்றது. அது போல் தான் கொலை திரைப்படமும். படத்தின் ஆரம்பத்தில் கருப்பு வெள்ளையில் வரும் காட்சி பிம்பங்கள் மட்டுமன்றி ஒட...
கொலை – புலனாய்வு அதிகாரியாக ரித்திகா சிங்

கொலை – புலனாய்வு அதிகாரியாக ரித்திகா சிங்

இது புதிது, சினிமா, திரைத் துளி
நடிகை ரித்திகா சிங் தேர்ந்தெடுத்து நடித்து வரக் கூடியப் படங்கள் அனைத்துமே அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற நடிகையான ரித்திகா சிங், அவரது அடுத்து வெளியாக இருக்கும் ‘கொலை’ படம் குறித்து உற்சாகமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 21, 2023) வெளியாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங், “தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான நல்ல கதாபாத்திரங்களை எனக்கு அளித்து வருகின்றன. ’கொலை’ படத்தில் எனக்குப் புத்திசாலித்தனமான ஒரு புலனாய்வு அதிகாரி கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனத்தைச் சோதிக்கும் சவாலான சூழ்நிலைகளை அவள் அடிக்கடி எதிர்கொள்வாள். கொலையின் மர்மத்தை முறியடிப்பது அவளுடைய முக்கிய வேலையாக இருக்கும். அதே வேளையில், அவள் தனது மூத்த அதிகாரிகளுட...
இன் கார் விமர்சனம்

இன் கார் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு நாளைக்கு இந்தியாவில் சுமார் 100 பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்ற புள்ளி விவரத்தினைச் சொல்கிறார் இயக்குநர் ஹர்ஷ் வர்தன். அதில் பல கடத்தல்கள் வெளியில் வருவதே இல்லை. அரை அடி தூரத்தில், பெண் போலீஸ் அமர்ந்திருக்கும்போது, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் சாக்ஷி குலாட்டி எனும் இளம்பெண்ணைக் கடத்தி விடுகின்றனர். பகலில் நடக்கும் ஒரு கடத்தலையே கூட, அது கடத்தல்தான் என மூளை உள்வாங்கிச் செயற்படும் முன் கார் சிட்டாய்ப் பறந்து விடுகிறது. சாலையில் வரும் ஒரு காரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி, காரைக் கடத்துகின்றனர் 3 கடத்தல்காரர்கள். அந்தக் கடத்தப்பட்ட காரிலே தான் சாக்ஷி குலாட்டி கடத்தப்படுகிறாள். பின் இருக்கையில், சாக்ஷி குலாட்டியின் இரு பக்கமும் கடத்தல்கார இளம்வயது சகோதரர்கள் இருவர், முன் இருக்கையில் அவரது மாமாவும் அமர்ந்துள்ளனர். படம், அதன் பின் காருக்குள்ளேயே நிகழ்க...
இன் கார் – காருக்குள் நிகழும் பெண்ணின் மனவேதனை

இன் கார் – காருக்குள் நிகழும் பெண்ணின் மனவேதனை

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்தக் கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அச்சந்திப்பில் பேசிய இயக்குநர் ஹர்ஷ் வர்தன், " 'இன் கார்' படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்து ...
ரித்திகா சிங் – முதல் ஹீரோ

ரித்திகா சிங் – முதல் ஹீரோ

சினிமா, திரைச் செய்தி
“பாக்ஸராக இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்கைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயம். கையில் வித்தை வச்சிருக்காங்க எனச் சொன்னாங்க. நான் நேர்ல ரிங்லயே அதைப் பார்த்திருக்கேன். சிவலிங்கா படத்தில் தான் தைரியமாக அவங்க கூட நடிக்கிறேன். அவங்க நேச்சுரல் ஆர்டிஸ்ட். நதி போல். படத்தில் பிரமாதமா பண்ணியிருக்காங்க” என்றார் ராதாரவி. “எனக்குத் தெலுங்கில் ரவி தேஜா ரொம்ப பிடிக்கும். ரொம்ப எனர்ஜிட்டிக்கான நடிகர். அதே போல், ஹீரோயின்ஸ்ல ரித்திகா சிங் ரொம்ப பிடிக்கும். அவங்க ரொம்ப எனர்ஜிட்டிக்கா நடிக்கிறாங்க. தெலுங்கில் இப்போ ‘குரு’ படம் ஹிட் ஆகியிருக்கு. இந்தப் படமும் அதே போல் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்கிறார் ரித்திகா சிங். “சிவலிங்கா படத்தில் முதல் ஹீரோ ரித்திகா சிங் தான்; இரண்டாவது ஹீரோ வடிவேலு; மூன்றாவது ஹீரோ சக்தி வாசு; நான்காவது ஹீரோ தான் நான்” என்றார் ராகவா லாரன்ஸ்....
ஆண்டவன் கட்டளை விமர்சனம்

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லண்டனுக்குச் செல்ல டூரிஸ்ட் விசா இலகுவாகக் கிடைக்க, ட்ராவல் ஏஜென்ட்டின் அறிவுரைப்படி மணமானவர் என பொய்யான தகவலைப் பாஸ்போர்ட்டில் கொடுத்து விடுகிறார் காந்தி. பின், இந்தியாவிலேயே கிடைக்கும் வேலையைத் தக்க வைக்க, இல்லாத மனைவியின் பெயரைப் பாஸ்போர்ட்டில் இருந்து அகற்ற காந்தி படும்பாடு தான் படத்தின் கதை. போலி ஆவணங்கள் பக்காவாக இருந்தும், காந்தி சொல்லும் ஒரே ஒரு உண்மை அவருக்கு விசா கிடைக்க விடாமல் செய்து விடுகிறது. பிறகு சொன்ன பொய்யை, சரி செய்ய நினைக்கையில் பொய்ப் பொய்யாய்ச் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொய்ச் சோதனையைக் காந்தியால் தாங்க முடியவில்லை. நெட்வொர்க்காய் ஏய்த்து வாழும் சாமானியர்களோடு சாமானியராய் முழி பிதுங்கும் காந்தி, ‘ஷ்ஷ்ப்பாஆஆ.. என்னை விட்டுடுங்கடா. நான் உண்மையையே பேசிச் சமாளிச்சுக்கிறேன்’ என மகாத்மாத்துவம் எய்துவது தான் படத்தின் உச்சக்கட்டம். காந்தியாக விஜய்...
இறுதிச்சுற்று விமர்சனம்

இறுதிச்சுற்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீனவப் பெண்ணான மதியின் திறமையைக் கண்டு கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பாக்ஸிங் வெற்றியாளராக்க முயற்சி செய்கிறார் கோச் பிரபு செல்வராஜ். அம்முயற்சியில் பிரபு சந்திக்கும் சிக்கல்களும் தடைகளும் தான் படத்தின் கதை. வாவ்..  இயக்குநர் சுதா கொங்கரா அசத்தலான படத்தைக் கொடுத்துள்ளார். வேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் மேடி தமிழ்ப் படம் பக்கம் திரும்பியுள்ளார். வேட்டை படத்திலிருந்ததை விட இப்படத்தில் இளைஞனாகத் தெரிகிறார் கோச் பிரபு செல்வராஜாக நடித்திருக்கும் மாதவன். ஆனால், படம் முழுவதும் 'அரைக்கிழம்' என்றே நாயகியாலும் மற்றவராலும் விளிக்கப்படுகிறார். மிகப் பொறுப்பான கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்துகிறார். குத்துச் சண்டை சங்கத்தில் நடக்கும் அரசியலைக் கண்டு கோபுமுறும் பொழுதும், குறிப்பாக ஊழலிலும் நயவஞ்சகத்திலும் ஊறியவர்களை எடுத்தெறிந்து அவமானப்படுத்தும் பொழுதும் கைத்தட்டல்களைப...