Shadow

Tag: ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான்

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி.தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, “ஜவான்” மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் உச்சம் தொ...
ஜவான்- விமர்சனம்

ஜவான்- விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது.  ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான்.  நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார்.  சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார்.  இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.  உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’  தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்...
‘ஜவான்’ படத்தில் சாதனை படைத்த  ‘ஹையோடா’  பாடல்

‘ஜவான்’ படத்தில் சாதனை படைத்த  ‘ஹையோடா’  பாடல்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
அன்பு  அனைத்தையும்  வெல்லும்!  என்கின்ற வாசகத்துக்கு ஏற்ப, ஜவானில் இடம்பெற்ற காதல் பாடலான  'ஹையோடா'  என  தமிழிலும் ,  'சலேயா'  என  இந்தியிலும், 'சலோனா'  என தெலுங்கிலும்  தொடங்கும்  பாடல்  வெளியாகி,  தமிழ், தெலுங்கு,  இந்தி  என  மூன்று  மொழிகளிலும்,  யூட்யூபில்  35  மில்லியனுக்கும் மேற்பட்ட  பார்வைகளை பெற்றுள்ளது.யூட்யூபில்  24 மணி  நேரத்தில்  உலகளவில்  அதிக  நபர்களால் பார்வையிடப்பட்ட  வீடியோவாகவும்  சாதனை  படைத்திருக்கிறது.யூட்யூப்  மற்றும்  யூட்யூப்  மியூசிக்  தர  வரிசையில்  'ஹையோடா' முதலிடத்தில்  ட்ரெண்டிங்கில்  உள்ளது.தமிழில்  'ஹையோடா' . இந்தியில் 'சலேயா'..,  தெலுங்கில் 'சலோனா'..,  எனத் தொடங்கும்  ஷாருக்கானின்  காதல்  பாடல்,  உண்மையிலேயே  ரசிகர்களுக்கு  சிறப்பான  விருந்தாகும்.  அழகான  நயன்தாரா  மற்றும் ஷாருக்கான்  உடனான  அவர்களது  கெமிஸ்ட்ரி  பார்வையாளர்களால் பாராட்டப்பட...
“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

சினிமா, திரைச் செய்தி
மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில்,  'ஹைய்யோடா'  பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை  தூண்டும் மேஜிக்கை செய்கிறது.  இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கங்களை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது..  இதயத்தை வருடும் மெல்லிசையும், காதல் பொங்கி வழியும் ஷாருக்கும் சேர்ந்த கலவையாக  இந்தப் பாடல்  ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்குள் பெரு விருந்தாக அமைந்துள்ளது.நடிகர் ஷாருக்கானும்  நயன்தாராவும்  முதன்முறையாக  இப்பாடலில்  ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர்  ஃபரா கானின் அற்புத நடன அமைப்பில், மிகவும் பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகளில்,  ஒரு அற்புதமான பாடலாக இப்பாடல் வெளிவந்துள்ளது.ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பிற்கு அனிருத் மிக அழகான பொருத்தமாக குரல் தர நயன்தாராவின் நேர்த்தியான தேனொ...
“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
ஜவான்” படத்தின்  மீதான  எதிர்பார்ப்பு  உச்சம்  தொட்டிருக்கும்  இந்த வேளையில் “வந்த இடம்” பாடல்,  விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர் வெளியீடு, #AskSRK நிகழ்வு, SRK UNIVERSEன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 52 நகரங்களில் வெளியிடல் கொண்டாட்டம் , வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிட்டது ஆகியவற்றின் மூலம் “ஜவான்” படத்தை லைம் லைட்டிலேயே வைத்திருக்கும் படக்குழுவினர் தற்போது அடுத்த அஸ்திரத்துடன் வந்துள்ளனர்.Ask SRK நிகழ்வின் போது ஷாருக்கானிடம் ‘ஜவான்’ படத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்று கேள்வி எழுப்பிய போது அவர் “ஹைய்யோடா” என்னும் ரொமாண்டிக் பாடல் தான் இப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக அமைந்துள்ளது என்று பதிலளித்திருந்தார். அப்பொழுது  இருந்தே அப்பாடல் மீதான ஃபீவர் ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது.தற்போது  “ஹைய்யோடா” பாடலின் டீசரை வெளியிட்ட...
ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி”  பந்தம்

ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி” பந்தம்

சினிமா, திரைச் செய்தி
மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் முதன்முறையாக பாலிவுட்டின் முதன்மை நடிகரான ஷாருக்கானுக்கும் தென்னிந்திய ரசிகர்களுக்கும்  மிகப்பெரிய உறவை உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணம்  தென்னிந்திய கலாச்சார உடையான லுங்கியை முதன்மைப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும் நடனமும் அமைந்திருந்தது தான் என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பையும், தென்னிந்திய ரசிகர்களிடம் அது சென்றடைந்த வீச்சையும் பார்த்தோ என்னவோ மீண்டும் ஒரு முறை ஷாருக்கான் தன் படத்தின் பாடலில் லுங்கியை கையில் எடுத்திருக்கிறார்.ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, கெளரி கான் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஜவான்”.  இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் த...