
சாண்டல்வுட்: சிவண்ணாவுடன் இணையும் KVN ப்ரொடக்ஷன்ஸ் – வடேயார் மூவிஸ்
ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியா, ஹிமாச்சலப் பிரதேசம், மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனம் KVN ப்ரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பவன் வடேயாருக்கு சொந்தமான வடேயார் மூவிஸ் மற்றும் வெங்கட் க...



