Shadow

Tag: ஸ்ரீதிவ்யா

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாளிகை போன்ற வீட்டுக்குள் இருக்கும் பாசக்கார ஆவி, 'இது என்னோட வீடு' என அவ்வீட்டினை விலைக்கு வாங்கும் ஜீவாவையும் அவரது குடும்பத்தினரையும் உள்ளே விட மாட்டேங்கிறது. எப்படி ஆவியை ஜீவா விரட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. வழக்கமான பேய்க் கதை என்ற பொழுதிலும், இயக்குநர் ஐக் அழகாகச் சுவாரசியப்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு, படம் தொடங்குவதற்கு முன், குடிப்பழக்கும் புகை பழக்கமும் உடம்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற வாசகத்தை 'நான் கடவுள்' ராஜேந்திரன் குரலில் கேட்கும் பொழுதே, படத்திற்கான மூடை செட் செய்து விடுகிறார். வாடகை வீட்டில் குடியிருப்போரின் வலியை அழகாகப் பதிவு செய்துள்ளனர். "வாடகை வீட்டில் இருப்பது ஜெயில் போல" என ராதிகா வலியுடன் சொல்வதில் இருந்து தான் படமே தொடங்குகிறது. நாயகனான ஜீவாவின் பெயர் போடுவதர்கு முன்பே 'டத்தோ' ராதாரவியின் பெயர் திரையில் தோன்றுகிறது. குடும்பம் என்றால் ஒற்றுமையாக...
மாவீரன் கிட்டு விமர்சனம்

மாவீரன் கிட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தமிழனாய் இந்தப் படத்தை உருவாக்கியதற்குப் பெருமை கொள்கிறேன்' என சுசீந்திரன் கூறியுள்ளார். அது உண்மை தான். கபாலியில் ரஞ்சித் சாதிக்காததை இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தில் சாதித்துக் காட்டியுள்ளார். கல்வியால் மட்டுமே மாற்றம் சாத்தியமென மெட்ராஸ் படத்தில் சொல்லியிருப்பார் ரஞ்சித். அதை அலட்சியத்தோடு, 'யார் படிக்க வேண்டாம்?' எனக் கேட்ட எகத்தாள பேர்வழிகளுக்கு, அக்கேள்வியின் அபத்தத்தை 'மாவீரன் கிட்டு' எனும் அழுத்தமான அரசியல் படம் புரிய வைக்கும். அரசியல் படம் மட்டுமன்று சாதீயத்தைப் பேசும் சாதிப்படமும்! அப்படி வரையறுப்பதும் கூடப் பிசகாகிவிடும். இது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் சமூகப்படம். கீழக்குடி மக்கள் இறந்தால் அவர்களின் பிணம் உயர்குடி மக்களின் தெரு வழியே கொண்டு செல்லக்கூடாதென தடை உள்ள புதூர் கிராமம் அது. நீதிமன்றம் வரை சென்று பிணத்தைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கியும் ஆதிக்கச் சாதியினரை மீறி...
காஷ்மோரா விமர்சனம்

காஷ்மோரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல பூதவித்தையின் பெயர் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அந்த வித்தை பிறவிலேயே கை கூடுவதால் நாயகனுக்கு அந்தப் பெயர் அவரது தந்தையால் சூட்டப்படுகிறது (காஷ்மோரா என்பது எவராலும் வெல்ல முடியாத ஒரு துர்தேவதை; அதை எழுப்பி ஏவி விட்டால் எதிரியை 21 நாளில் கொன்று விடும்; பில்லி, சூனியத்தை விட ஆபத்தான ஏவல் வித்தை காஷ்மோரா என்கிறார் 'துளசி தளம்' எனும் நாவலில் தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்). சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்த்ரீலோலன் ராஜ்நாயக் சாபத்தினால் பைசாசமாய் ஒரு மாளிகையில் அடைப்பட்டுள்ளான். அந்த மாளிகைக்கு வரவழைக்கப்படுகிறான் பிறவிப் பேயோட்டியான காஷ்மோரா. யார் யாரை ஓட்டுகின்றனர் என்பதே படத்தின் கதை. படத்தின் ஓப்பனிங் காட்சி படு பிரமாதமாய் உள்ளது. ஒரு சீரியஸான படத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே ஒரு பாடல் வருகிறது. அங்குத் தொட...
ஈட்டி விமர்சனம்

ஈட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது பலவீனத்தை, முறையான பயிற்சியின் மூலமாக எதிர்கொண்டு விருப்பப்பட்ட துறையில் புகழ் சாதிக்கிறானா இல்லையா என்பது தான் கதை. புகழாக அதர்வா. குறி தப்பாது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் ஈட்டி போல் அவரது உடம்பு கச்சிதமாக உள்ளது. நாயகன் என்பதால் வென்று விடுவான் என்ற சினிமாத்தனத்தை மீறி, இந்த முயற்சிக்கு வெல்லாமல் எப்படி என்ற உணர்வைத் தருவது தான் அதர்வாவின் வெற்றி. வசன உச்சரிப்பின் போது, கடைசி வார்த்தையைக் கத்தரித்தது போல் பேசுவார். இப்படத்தில், அதர்வாவின் அக்குறையும் கலையப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாயகனாய் அனைவரையும் கவர்கிறார். சிறந்த துணை நடிகராய்த் தன்னை நிரூபித்து வரும் ஆடுகளம் முருகதாஸை அசட்டுத்தனமான நகைச்சுவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் ரவி அரசு. காட்சிகளின் நீளத்தை அதிகரிக்கவே அவர் பயன்பட்டுள்ளார். கதையோடு பொருந்தாமல், துருத்திக் கொண்டிருக்கும் சில காட்சிகளைக...
ஜீவா விமர்சனம்

ஜீவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு பள்ளிப் பருவக் காதலையும், தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பெறும் சாதி அரசியலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். ஜீவாவாக விஷ்ணு விஷால். மீசை தாடியை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவராக திரையில் அறிமுகமாகிறார். என்னடா இது சோதனை என்றிருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் அந்த எண்ணம் மெல்ல மறையத் தொடங்குகிறது. கல்லூரிக்கு வந்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என ஜீவா முடிவெடுத்து, அரசியலால் காயப்படும் பொழுதெல்லாம் மனதில் அப்பாத்திரமாகவே நிற்கிறார். நான் மகான் அல்ல படத்தில், ‘இறகை போல் அலைகிறேன்’ என்ற பாடலில் செய்த மாயத்தை, இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவைக் கொண்டு செய்துள்ளார் சுசீந்திரன். பள்ளி மாணவியாக அவர் காட்டும் குறும்புத்தனமான முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு பள்ளி மாணவர் என்ற கொடுமையை சகிக்க வைக்க பெரிதும் உதவி செய்பவர் ஸ்ரீதிவ்யாவே! ஆனால் என்ன, நாயகனின் தாய...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் (!?) காரணமான நபர் எனக் கூறலாம். அதாவது பொறுப்பற்ற கதாபாத்திரங்கள் நகைச்சுவையாளர்கள் என்ற நிலையில் இருந்து நாயகர்களாக மாறி விட்டனர். சிலுக்குவார்பட்டி சமூக ஆர்வலன் போஸ்பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நிறுவி தலைவராக இருப்பவன். மண் கடத்தல், பால்ய விவாகம் போன்றவற்றைத் தடுப்பவன். ஊர் பெரியவரான சிவனாண்டியின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை.போஸ்பாண்டியாக சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்தினைக் கூட இயக்குநரின் படம் என சொல்லலாம். ஆனால் இப்படம் பொறுப்பில்லாத போஸ்பாண்டியினுடையது. முந்தைய படத்தினை விட கொஞ்சம் நடிப்பிலும் மெருகேறியுள்ளார். அசட்டுத்தனமாக வழியும் ஒற்றை பாவனையிலிருந்து ஒருவழியாக மீண்டு சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். அவரது நடனமும் ரசிக்க வைக்கிறது. அவர...