Shadow

Tag: ஸ்ரீநிதி ஷெட்டி

கோப்ரா டூர் @ கோவை | விக்ரம்

கோப்ரா டூர் @ கோவை | விக்ரம்

சினிமா, திரைச் செய்தி
திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம், “கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் த்ரில்லர், எமோஷ்னல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை-ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம்’ எனத் தெரிவித்தார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்தத் திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை, கோவை உள்ளி...
கோப்ரா டூர் @ மதுரை | விக்ரம்

கோப்ரா டூர் @ மதுரை | விக்ரம்

இது புதிது
‘சீயான்’ விக்ரம் நடிப்பில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ்-பிக்சன் கதையில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களைச் சந்தித்தனர். கோலகலமாக ரசிகர்களின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது. நடிகை மீனாட்சி, “இப்படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தின் புரமோசனை இன்று தான் துவங்கினோம். மதுரையில் உங்களுடன் அதைத் துவங்கியது மிகுந்த மகிழ்ச்சி. ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. விக்ரம் சாருக்கான் எல்லோரும் படம் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்” எ...
கோப்ரா டூர் @ திருச்சி | விக்ரம்

கோப்ரா டூர் @ திருச்சி | விக்ரம்

சினிமா, திரைச் செய்தி
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இந்நிழ்வினில் பேசிய நடிகை மீனாட்சி, "விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பைத் தருவார். நாமெல்லாம் சில ...
“KGF – இது பிரசாந்த் நீலின் படம்” – யஷ்

“KGF – இது பிரசாந்த் நீலின் படம்” – யஷ்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்தப் படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தைப் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திர...
KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல்

KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல்

சினிமா, திரைத் துளி
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 'கேஜிஎஃப் சாப்டர் 2' படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கேஜிஎஃப் சாப்டர் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கேஜிஎஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரக...