Shadow

Tag: அனுராக் காஷ்யப்

நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer

நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான 'நிஷாஞ்சி' படத்தின் அதிரடி ட்ரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஆக்ஷன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த ட்ரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதைச் சித்தரிக்கிறது. ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா, ரஞ்சன் சந்தேல் மற்றும் அனுராக் காஷ்யப் திரைக்கதை எழுதியுள்ளனர். வேதிகா பின்டோ, மோனிகா பன்வார், முகமது ஜீஷான் அய்யூப் மற்றும் குமுத் மிஸ்...
Bad Girl | பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்திய படம்

Bad Girl | பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்திய படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா, 76 ஆவது குடியரசு தினத்தன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. Bad Girl, பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் & அனுராக் காஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தொகுப்பாளரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இயக்குநர் மிஷ்கின், “இந்தப் படத்தின் ட்ரைலர் பார்த்தேன். மிகவும் நன்றாக...
மகாராஜா விமர்சனம்

மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை மூன்றுபேர்  அடித்துப் போட்டுவிட்டு, தன் வீட்டில் இருந்த லட்சுமியை  தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார் விஜய் சேதுபதி. லட்சுமி என்பது என்ன, அந்தப் புகாரைக் காவல்துறை ஏன் எடுத்துக் கொள்ள மறுக்கிறது, பின்னர் ஏன் அந்தப் புகாரை எடுத்துக் கொள்கிறது, அந்தப் புகாரின் பின்னால் ஒளிந்திருக்கும்  உண்மை என்ன என்பது தான் இந்த மகாராஜாவின் கதை. கதையை விரிவாகப் பேச முயன்றால் திரைக்கதையின் சுவாரசியங்கள் கெட்டுவிடும் என்பதால், கதை என்ன என்பதைப் பெரிதாக விவாதிக்காமல் காட்சிகளையும், திரைக்கதை யுக்தியையும், கதாபாத்திர வடிவமைப்பையும் பற்றி அதிகமாக விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். காட்சிகளைப் பற்றிப் பேசத் துவங்கினால், ஒவ்வொரு காட்சியுமே Half Way-இல் துவங்குகிறது. அதாவது ஒரு சம்பவத்தின் பாதியிலிருந்து காட்சி துவங்குகிறது. அதுபோல் ஒரு காட்சி துவங்கும்...