Shadow

Tag: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்

“உதவும் மனப்பான்மை வணிகமாக மாறி குற்றச்சம்பவத்திற்கு வழி வகுக்கிறது” – அதிஷா | DNA

“உதவும் மனப்பான்மை வணிகமாக மாறி குற்றச்சம்பவத்திற்கு வழி வகுக்கிறது” – அதிஷா | DNA

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, கடந்த இருபதாம் தேதியன்று வெளியான DNA திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் வெற்றிக்குக் காரணமான இணை கதாசிரியரும் எழுத்தாளருமான அதிஷா, '' இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவுப் பயணம். இந்தத் தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன்.‌ இந்த க...
டிஎன்ஏ விமர்சனம் | DNA review

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை நம்பித் தனது குழந்தைக்காகப் போராடத் தொடங்குகிறான். சுழலில் சிக்கியது போல், ஆனந்தின் அந்தத் தேடலும் போராட்டமும் அவனை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. திவ்யாவின் மீது ஆனந்த் வைத்த நம்பிக்கை வென்றதா இல்லையா என்பதே படத்தின் முடிவு. ஃபர்ஹானா படத்தில், வசனங்களுக்காக மனுஷ்யபுத்திர...
“சக மனிதரை நேசி” – நெல்சன் வெங்கடேசன் | காதல் என்பது பொதுவுடமை

“சக மனிதரை நேசி” – நெல்சன் வெங்கடேசன் | காதல் என்பது பொதுவுடமை

சினிமா, திரைச் செய்தி
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ஜெயபிரகாஷ், "லென்ஸ் முடிச்சுட்டு அடுத்து என்னென்னு தெரியாம இருந்தது. ஒரு நண்பரைப் பார்க்க பெங்களூரு போயிருந்தேன். பீர் நல்லா இருக்கும் ஒரு பாரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். கன்னடத்தில் படம் எடுத்தா, 17 லட்சம் வரை மானியம் கிடைக்கும்ன்னு சொன்னார். மறுபடியும் சின்ன பட்ஜெட்டில் ஒரு படமா என யோசித்துக் கொண்டே, ஒரு டிஷ்யூ பேப்பரில் கிறுக்கின கதைதான் இது. சென்னை வந்து கோ...
ஃபர்ஹானா விமர்சனம்

ஃபர்ஹானா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஃபீஸ் ரூமில் இருந்து வகுப்பறைக்கு அறிக்கை வந்து, ஃபீஸ் கட்டாதவர்களின் பெயர் படிக்கப்பட்டுக் குற்றவாளிகள் போல் மாணவர்கள் எழுந்து நிற்க வைக்கப்படுவது என்பது மிகக் குரூரமான உளவியல் தாக்குதல். அத்தகைய தாக்குதல்களில் இருந்து தன் குழந்தைகளைப் பாதுகாக்க, ஃபர்ஹானா வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி., கொரோனா கால ஊரடங்குகள் என வாழ்க்கை, குறிப்பாக சிறு தொழிலில் ஈடுபட்டோரை நிலைகுலைய வைத்துள்ளது. அப்படி, செருப்புக் கடை வைத்துள்ள ஃபர்ஹானாவின் தந்தைக்கும் வருமானத்தில் இழப்பு நேரிடுகிறது. வங்கியின் பிபிஓ (BPO)-வில் வேலைக்குச் சேரும் ஃபர்ஹானாவிற்கு, ஓர் அவசரத் தேவைக்காகக் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கும் பொருட்டு, ஊக்கத்தொகை அதிகம் கிடைக்கும், அலுவலகத்திற்குள்ளேயே இயங்கும் வேறொரு பிரிவிற்குப் பணிக்குச் செல்கிறார் ஃபார்ஹானா. தனிமையில் வாடுபவர்கள் நட்பு...
மான்ஸ்டர் விமர்சனம்

மான்ஸ்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஞ்சனம் அழகியபிள்ளை ஒரு சொந்த வீடு வாங்குகிறார். அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரு எலியும், ஒரு மான்ஸ்டரும் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எலியும், மான்ஸ்டரும் ஏன் எதற்கு அவர் வீட்டைச் சுற்றி வருகின்றனர் என்பதும், அதிலிருந்து அஞ்சனம் அழகியபிள்ளை எப்படித் தப்பிக்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. ஒருவழியாக, எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகுமளவு ஒரு நல்ல குழந்தைகள் படம், ஆச்சரியமாகத் தமிழில் நேரடியாக வெளியாகியுள்ளது. சுட்டீஸ், குட்டீஸ்களுக்கு ஏற்றதொரு படமாக மட்டும் அல்லாமல், பெரியவர்களும் ரசித்து மகிழும்படியான படமாகவும் உள்ளது. அஞ்சனம் அழகியபிள்ளை, பெண் பார்ப்பதற்காக மேகலா வீட்டிற்குச் செல்கிறார். மேகலாவாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கதைக்கு உதவாத கதாபாத்திரம் எனினும் நிறைவாகத் தோன்றியுள்ளார் படத்தில். எஸ்.ஜே.சூர்யாவும், எலியும் தான் பிரதான பாத்திரங்கள் என்றால...