Shadow

Tag: இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

”பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’யே இன்னும் பழைய பாதையாகவில்லை” – இயக்குநர் பேரரசு

”பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’யே இன்னும் பழைய பாதையாகவில்லை” – இயக்குநர் பேரரசு

சினிமா, திரைச் செய்தி
உலகிலேயே முதல் முறையாகத் திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச த்ரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசையையும் ட்ரெய்லரையும் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேர...
இரவின் நிழல் விமர்சனம்

இரவின் நிழல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரவை விடவும், இரவின் நிழலை விடவும், அடர்த்தியான இருண்மையைக் கொண்டுள்ளது 'இரவின் நிழல்' திரைப்படம். "இது மென்மையான மனம் கொண்டோருக்கான படமில்லை" என மேக்கிங் வீடியோவில் எச்சரிக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 92 நிமிட கால அளவைக் கொண்ட படம் தொடங்குவதற்கு முன், 30 நிமிட மேக்கிங் வீடியோ போடுகிறார் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். உலகத்திலேயே முதல் முறையாக சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்ற முறையில் தமிழர்கள் எல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். புதிய முயற்சிக்கான தேடலோடு ஓடும் பார்த்திபன் இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். 💐 Start, Camera, Action, Hospital என்று உடல் அங்கங்களை உடைத்துக் கொள்ளும் ஜாக்கி சான், தன் படங்களின் முடிவில் ப்ளூப்பர்ஸை ஜாலியாக ரசிக்கும்படி வைத்திருப்பார். பிறகு, வெற்றி பெற்ற படத்தின் மேக்கிங் வீடியோவைத் தனியாக இணையத்தில் வெளியிடும் வழக்கம் வந்தது. எங்கும் எதிலும் எப்ப...
சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்

சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்

OTT, Web Series
தமிழில் வெளிவரும் அமேசான் ப்ரைமின் முதல் வெப் சீரிஸ் இது. புஷ்கர் - காயத்ரி இணை எழுதிய இத்தொடரை, பிரம்மாவும் அனுசரணும் இயக்கியுள்ளனர். குற்றம் கடிதல், மகளிர் மட்டும் இயக்கிய பிரம்மா, முதல் நான்கு அத்தியாயங்களையும், கடைசி நான்கு அத்தியாயங்களை இயக்குநர் அனு சரணும் இயக்கியுள்ளனர். மலைகள் சூழ்ந்த சாம்பலூர் எனும் சின்ன ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவி நிலா கடத்தப்படுகிறாள். அந்த வழக்கை விசாரிக்கும் சக்கரை எனும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் திருப்பமாக அமைகிறது. சக்கரையாக மிகத் திறம்பட நடித்துள்ளார் கதிர். இந்தத் தொடரின் நாயகன் இவரே! சின்னச் சின்ன முக பாவனைகளிலும் ஸ்கோர் செய்கிறார். இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸாக நடித்துள்ள ஷ்ரேயா ரெட்டி தான் தொடரின் நாயகி. இன்ஸ்பெக்டராக அவர் காட்டும் கம்பீரமும், ஓர் அம்மாவாக அவர் இளகும் இடமும் என கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொ...
பார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு

பார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு

சினிமா, திரைத் துளி
தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். அவரது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்குத் தணிக்கைக் குழுவில் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எழுத்தாளரும் இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், “நான் வழக்கமாக ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதை உருவாக்கும் போது, தணிக்கைச் சான்றிதழ் செயல்முறையை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். சமரசம் செய்வதன் மூலம், ஸ்கிரிப்ட் அதன் தாக்கத்தை இழக்கும் என்று நான் நம்புகிறேன். ஒத்த செருப்பு சைஸ் 7 கதையும் அந்த வகையில் எழுதப்பட்டது தான். அதற்குத் தணிக்கைக் குழுவில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு படத்திற்கு இரண்டு சான்றிதழ் செயல்முறைகள் உள்ளன, ஒன்று தணிக்கைக் குழுவிடம் இருந்து வருவது, மற்றொன்று பார்வையாளர்களிடம் இருந்து வருவது. எனவே நான் எனது திரைப்படத்தை அ...
பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக

பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக

சினிமா, திரைத் துளி
Crowd funding முறையில் தயாரிக்கும் இப்படத்தை PROUD funding என்றே தற்பெருமையாக ஏன் குறிப்பிடுகிறேன் என்று சொல்லும் முன், இன்று இன்னும் இரண்டு படங்கள் என் நடிப்பில் துவங்குகிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் தம்பி விஷ்ணு விஷாலுடன் இணையும் ஒன்றும், புதிய இயக்குநர் சுதர்சன் இயக்க ‘கயல்' சந்திரனுடன் நடிக்கும் 2MB தயாரிப்பில் இன்னொன்றும் இப்படி மூன்று படங்கள் இன்றைய தளத்தில் - நாளைய தரத்தில்! இன்னும் ஒன்று தேனாண்டாள் படம் அக்டோபரில், இன்னும் சில பேச்சு வார்த்தையில். இதை விட, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எனக்காக ஒரு கதை சொல்ல கேட்ட 'உடன்' நானே அவருக்கு முன் தொகை கொடுத்து முன் பதிவு செய்து கொண்டுள்ளேன். அதுவும் விரைவில் துவங்கும். சோ, குறை ஒன்றுமில்லை - இருந்தால் மறைக்காத மூர்த்தி நானே!'REEL estate company llp' என்ற crowd/proud funding என்ற கூட்டு தயாரி...