
கமல் ஹாசன் – வைரலாகும் புதிய லுக்
கமல்ஹாசனின் புதிய திரைப்படத்திற்கான 'லுக் டெஸ்ட்' காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார். கமல்ஹாசன், S.U.அருண் குமார் கூட்டணிக்குப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான 'லுக் டெஸ்ட்' நடைபெற்றது. அதன் காட்சிகள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளன. கமல்ஹாசனின் இந்த ஈர்க்கக்கூடிய புதிய தோற்றம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது; ரசிகர்கள் இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.கமல்ஹாசனும், திரைப்பட இயக்குநர் S.U.அருண் குமாரும் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு, தனித்...










