
விஜய்சேதுபதி வெளியிட்ட கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ பட முதல் பார்வை!
பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடிய கயல் ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் ...









