32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

கருணாகரன்

22 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review சினிமா முக்கியச் செய்தி
07/03/2026 Dinesh R 2 நிமிட வாசிப்பு

முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

முப்பது வருடங்களுக்கு முன் வெளியான ‘காதல் தேசம் (1999)’ படத்தில், நட்பின் மேன்மையையும் இணக்கத்தையும் எடுத்தியம்பும் பாடலின் தொடக்கச் சொற்கள் ‘முஸ்தபா முஸ்தபா’ ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த அப்பாடல் நட்பிற்கான பாடலாக மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஆழமான நட்பினைச் சொல்லும் விதமாக இத்தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவி சேனலில் வேலை செய்யும் கார்த்திக், எப்பொழுதோ ஒரு திரைப்படத்தில் ஒருநாள் மட்டுமே நடித்த ஒரு மார்க்கமான காட்சி, ஆபாச (porn) இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review சினிமா

ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review

‘தேன் நிலவு (1961)’ எனும் படத்தில், மிக பெப்பியான வார்த்தைகள 64 வருடங்களிற்கு முன்பே பயன்படுத்தி அசத்தியுள்ளார் கவிப்பேரரசு கண்ணதாசன். தற்போதும் வைப் செய்யும்படியான அவரது வார்த்தைகளைத் தலைப்பாகப் படத்திற்குச் சூட்டியுள்ளனர். இயக்குநராகும் முயற்சியில் உள்ள அஷ்வின், நடிகரான விஷ்ணு விஷாலைச் சந்தித்து கதை சொல்கிறார். காதல் கதையை எதிர்பார்க்கும் விஷ்ணு விஷாலுக்குத் தனது காதல் கதையையே சொல்கிறார் அஷ்வின். ஆனால், ஈகோவால் மீராவுடன் பிரேக்-அப் ஆகி நிற்கும் காதல் கதையை முழுமைப்படுத்த, மீராவைச் சந்தித்து உண்மைத்தன்மையுடன் […]

11/07/2025 Dinesh R
லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review சினிமா

லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள் ஒன்று கீழே கிடக்கிறது. அதை நான்கு பேர் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்குள் சண்டை வேண்டாமென சரிசமமாகப் பகிர்ந்து குடிக்கலாம் என பாருக்குப் போகிறார்கள். சைட் டிஷாக லெக் பீஸ் வருகிறது. ‘கண்ட இடத்தில் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை உண்ணும் கோழியின் லெக் பீஸைச் சாப்பிட்டால் வீண் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்பது என் ஐதீகம்’ என்கிறார் திடீர் திருப்பதி. மிமிக்ரி கோபி, குயில் குமார், பேய் முருகேசன் ஆகிய மூவரும் லெக் பீஸ் […]

08/03/2025 Dinesh R
தண்டேல் விமர்சனம் இது புதிது

தண்டேல் விமர்சனம்

தண்டேல் என்றால் தலைவர் எனப் பொருள். ஆந்திராவின் மச்சதேசம் எனும் மீனவக் கிராமத்தில் இருந்து 22 பேர் குஜராத் சென்று மீன் பிடிக்கின்றனர். எல்லையைத் தாண்டிவிட்டார்கள் என பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து விடுகிறது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வலுவான காதல் கதையைத் தந்துள்ளார் இயக்குநர் சந்து மொண்டேட்டி. அமரன் படத்தில் ஒரு இராணுவ வீரிரன் காதல் மனைவியாக நடித்து, அந்தப் பாத்திரதிற்கு உயிர் கொடுத்தாரோ, அப்படி தண்டேல் படத்தில், ஒரு […]

08/02/2025 Dinesh R
அயலான் விமர்சனம் சினிமா

அயலான் விமர்சனம்

நெடுநாளாக புரொடெக்‌ஷனில் இருந்து, படம் வெளியாகுமா இல்லை கைவிடப்படுமா என்பதான சந்தேகங்கள் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து, அவைகளை வெற்றிகரமாக கடந்து இந்த பொங்கல் பண்டிகைக்கு வெள்ளித் திரையில் வெளியாகியிருக்கிறார் அயலான்.  ‘இன்று நேற்று நாளை’ என்கின்ற அறிவியல் புனைவு கதையை தன் முதற்படமாக செய்து பெரும் வெற்றி கண்ட இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படம். சிவகார்த்திகேயன் நடிப்பில்  பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்தப் படம் என்று படத்தின் மீது […]

17/01/2024 Inbaaraja
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக் ”  சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக் ” 

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகிவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் மற்றும் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து […]

15/12/2023 Inbaaraja
அவள் பெயர் ரஜினி விமர்சனம் இது புதிது

அவள் பெயர் ரஜினி விமர்சனம்

படத்தின் ஆரம்பத்தில் மர்மமான முறையில் நடக்கும் ஒரு மரணம். அந்த மரணத்தின் பின் இருக்கும் மர்மங்களை அவிழ்க்க, நாயகனின் போராட்டம், இவையே “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தின் ஒற்றை வரிக்கதை. படத்தின் துவக்கத்தில் காரில் ஹைவேஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்  ஒரு கணவன் மனைவி காட்டப்படுகிறார்கள். கார் ஓட்டிக் கொண்டு வரும் கணவனுடன் நாயகன் காளிதாஸ் வீடியோ காலில் மாம என்று அழைத்தபடி பேசிக் கொண்டு வருகிறான். அவன் பேசி முடிக்கும் தறுவாயில் கார் பெட்ரோல் இல்லாமல் […]

08/12/2023 Inbaaraja
சொப்பன சுந்தரி விமர்சனம் இது புதிது

சொப்பன சுந்தரி விமர்சனம்

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். பிறரது பொருளுக்கு ஆசைப்பட்டால் துன்பம் வந்து சேரும் என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. அதை டார்க் காமெடியாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் SG சார்லஸ். சிவப்பு நிறக் கார் என்றால் சொப்பன சுந்தரியும், சொப்பன சுந்தரி என்றால் சிவப்பு நிறக் காரும் ஞாபகத்திற்கு வருமளவு, கரகாட்டக்காரனில் வரும் அந்த நகைச்சுவைக் காட்சி அவ்வளவு பிரபலம். இப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிறக் […]

14/04/2023 Dinesh R
பன்னிகுட்டி விமர்சனம் சினிமா

பன்னிகுட்டி விமர்சனம்

கருணாகரன், யோகிபாபு, சிங்கம்புலி, விஜய் டிவி ராமர், பழைய ஜோக் தங்கதுரை, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன் ஆகியோரோடு ஓர் அழகான பன்னிகுட்டியும் நடித்துள்ளது. வேலையில்லா உத்ராவதிக்குத் தொட்டதெல்லாம் பிரச்சனையாகத் தெரிய, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தூக்கு மாட்டிக்க பலமுறை முயல்கிறார். அவரை ஒருமுறை காப்பாற்றும் ப்ரூனே, கோடாங்கியிடம் அழைத்துச் செல்கிறார். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அவர் சொல்லும் பரிகாரத்தைச் செய்ததும், அவரது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நல்லது நடக்கிறது உத்ராவதிக்கு. மகிழ்ச்சியில் கோடாங்கிக்கு நன்றி சொல்ல வரும் வழியில், பன்னிக்குட்டி […]

09/07/2022 Dinesh R
ஜீவி விமர்சனம் சினிமா

ஜீவி விமர்சனம்

அறிவுஜீவி, புத்திஜீவி என்பதன் சுருக்கமாகத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஜீவி என்றால் ஜீவிப்பவர், அதாவது உயிர்வாழ்பவர் அல்லது பிழைப்பவர் எனப் பொருள் கொள்ளலாம். படத்தின் தலைப்பை, அறிவால்  ஜீீவிப்பவர் என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சரவண லெனின், தனது வீட்டு ஓனரான லக்ஷ்மி வீட்டில் திருடுகிறான். அப்பொழுது அவன் வீட்டில் தொடர் அசாம்பாவிதங்கள் நிகழ்கிறது. அதே போன்ற நிகழ்வுகள், லக்ஷ்மிக்கும் அவரது இள வயதில் நடந்துள்ளதை அறிகிறான். ஆக, லக்ஷ்மி குடும்பத்தில் நிகழ்வது அனைத்தும் தன் வீட்டிலும், பிரதி எடுத்தது […]

28/06/2019 Dinesh R
மான்ஸ்டர் விமர்சனம் சினிமா

மான்ஸ்டர் விமர்சனம்

அஞ்சனம் அழகியபிள்ளை ஒரு சொந்த வீடு வாங்குகிறார். அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரு எலியும், ஒரு மான்ஸ்டரும் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எலியும், மான்ஸ்டரும் ஏன் எதற்கு அவர் வீட்டைச் சுற்றி வருகின்றனர் என்பதும், அதிலிருந்து அஞ்சனம் அழகியபிள்ளை எப்படித் தப்பிக்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. ஒருவழியாக, எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகுமளவு ஒரு நல்ல குழந்தைகள் படம், ஆச்சரியமாகத் தமிழில் நேரடியாக வெளியாகியுள்ளது. சுட்டீஸ், குட்டீஸ்களுக்கு ஏற்றதொரு படமாக மட்டும் […]

20/05/2019 Dinesh R
பொதுநலன் கருதி விமர்சனம் சினிமா

பொதுநலன் கருதி விமர்சனம்

மக்களின் பொதுநலனில் அக்கறை உள்ளதால், கம்மியான வட்டிக்குப் பணம் தருகிறோம் எனத் தனக்குத் தொழில் கற்றுக் கொடுத்தவரைக் கொன்றுவிட்டுத் தொழிலுக்கு வருகிறார்கள் உத்திரமூர்த்தியும், பாபு சேட்டும். இருவரும் தங்களுக்கென ஓர் எல்லையை வகுத்துக் கொண்டாலும், வளரத் தொடங்கியதும் இருவரில் யார் பெரியவரென்ற போட்டியும் பொறாமையும் முளைவிடுகிறது. அவர்கள் தொழிலாலும், அவர்களுக்கிடையேயான போட்டியாலும், யார் யார் பாதிப்படைகிறார்கள் என்பதே படத்தின் கதை. உத்திரமூர்த்தியிடம் வேலை செய்யும் நெப்போலியனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகன் என்று சொல்லக்கூடிய கதாபாத்திர […]

09/02/2019 Dinesh R
சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம் சினிமா

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

ஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று தனக்கொரு பாணியை உருவாக்கி வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தைத் தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை படமாக, அவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவந்துள்ளது. எந்த வம்புதும்புக்கும் போகாத மாaணிக்கமாக வாழ்பவர் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி. தான் பிறவி எடுத்ததே, காவல்நிலையத்தில் உள்ள சக காவலதிகாரிகளுக்கு உணவு வாங்கிவரத்தான் என்று கடமையில் கண்ணுமாய்க் கருத்துமாய் இருப்பார். அவர் […]

23/12/2018 Dinesh R
கஜினிகாந்த் விமர்சனம் சினிமா

கஜினிகாந்த் விமர்சனம்

திரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பதாலோ என்னவோ, அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரமான பேராசிரியர் பாலு (ரஜினி) போல, ஆர்யாவிற்குப் பிறந்தது முதலே ஞாபக மறதி. ஆனால், ஆர்யா அந்த ரஜினியை விடவும் சிக்கலானவர். ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்யாவிடம் பேச்சுக் கொடுத்தால், செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து இருந்து கவனத்தைத் திருப்பி, அதை சுத்தமாக அடுத்த வேலையில் மனது திசை திரும்பிவிடும். அதனால் தந்தையாலும் நண்பர்களாலும், ‘கஜினிகாந்த்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறார். […]

04/08/2018 Dinesh R
கடிகார மனிதர்கள் விமர்சனம் சினிமா

கடிகார மனிதர்கள் விமர்சனம்

ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு மகள், இரண்டு மகன், கணவன், […]

03/08/2018 Dinesh R