Shadow

Tag: கலைப்புலி எஸ். தாணு

அரசன் – கோவில்பட்டியில் வெற்றிமாறனும் சிலம்பரசனும்

அரசன் – கோவில்பட்டியில் வெற்றிமாறனும் சிலம்பரசனும்

சினிமா, திரைத் துளி
வெற்றிமாறன், சிலம்பரசன் டிஆர், கலைப்புலி S.தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'அரசன்' படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. வடசென்னை என்னும் வெற்றிப் படத்தின் பிரபலமான உலகத்திலிருந்து உருவாகும், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் கோவில்பட்டியில் தொடங்கிய அரசன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடரும். வெற்றிமாறனின் பாணியில் அரசன் படத்தில் உள்ள முக்கியமான காட்சிகளைக் குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். விடுதலை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றுகிறார். விரைவில் அரசன் படப்பிடிப்பில் இணைவார். ஒரு முக்கிய மைல்கல்லாக, 'அரசன்' படம் ராக்ஸ்டார் அனிருத், சிலம்பரச...
Eleven | D.இமான் இசையமைக்கும் முதல் த்ரில்லர் படம்

Eleven | D.இமான் இசையமைக்கும் முதல் த்ரில்லர் படம்

சினிமா, திரைச் செய்தி
ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் உருவாகியுள்ள 'லெவன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 'லெவன்' பத்தின் ட்டிரெய்லரை உலக நாயகன் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ''நண்பர் அக்பரின் வாரிசான அஜ்மல் கான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைக்கும் அளவிற்குக் க...
சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘கலியுகம்’ – மே 9 ஆம் தேதி வெளியாகிறது

சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘கலியுகம்’ – மே 9 ஆம் தேதி வெளியாகிறது

சினிமா, திரைத் துளி
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் த்ரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “கலியுகம்” ஆகும். மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு படக்குழுவைச் சந்தித்துப் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார். ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர் வாழ்வதே மிகச் சிக்கலாக இருக்கிறது. ஒழுக்கம் ம...
கிங்ஸ்டன் – பேரலல் யுனிவெர்ஸ் என்றால் என்ன?

கிங்ஸ்டன் – பேரலல் யுனிவெர்ஸ் என்றால் என்ன?

சினிமா, திரைச் செய்தி
ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ''இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்குப் பிறகு பின்னணி இசையில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. 'அசுரன்' படத்தினைத் தயாரித்தேன். அந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திரு...
“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்

“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்

திரைச் செய்தி, திரைத் துளி
ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவ...
ஆளவந்தான் விமர்சனம்

ஆளவந்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘இதயம் பேசுகிறது’ இதழில், 80களில் “தாயம்” என்ற பெயரில் கமல் எழுதிய தொடர், 2001 இல் ‘ஆளவந்தான்’ ஆகத் திரையேற்றம் கண்டது. திரைக்கதை, வசனத்தைக் கமல் எழுத, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். வெளியான போது 178 நிமிடங்கள் கால அளவினைக் கொண்ட படத்தைத் தற்போது 122 நிமிடங்களாகச் சுருக்கி, 4K தெளிவுத்திறனில் (resolution) வெளியிட்டுள்ளனர். சித்தி கொடுமைக்கு உள்ளாகும் விஜயும் நந்துவும் இரட்டையர்கள். விஜயை, அவரது மாமா இராணுவப்பள்ளியில் சேர்க்க, தந்தையுடன் தங்கும் நந்துவோ சித்தியைக் கொன்ற குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். இராணுவ அதிகாரியாகும் விஜய், தேஜஸ்வினியைக் காதலித்துத் திருமணம் புரிகிறார். சித்தி தான் தேஜஸ்வினியாக வந்துள்ளார் என நம்பும் மனச்சிதைவுடைய (schizopernia) நந்து, தேஜஸ்வினியைக் கொன்று விஜயைக் காப்பாற்ற நினைக்கிறான். வேட்டையாடப் பயிற்சியெடுத்த விஜய் தேஜஸ்வ...
கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம்

கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம்

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் தரமான படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன் தயாரிக்கும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். இந்தப் புதிய படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமத்துரை, '96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார். இப்படத்தில் ஜி.விபிரகாஷ் கல்லூரி ...
இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

சினிமா, திரைச் செய்தி
25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திரஜித் படத்தைக்கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சக்கரக்கட்டி படத்தை இயக்கிய அவரது இளைய மகன் கலாபிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நாயகனாகவும், சோனாரிகாவும் அஷ்ரிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். அக்டோபர் 15 அன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டது. சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுமென்ற நம்பிக்கையை ட்ரெயிலர் ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவும், VFX-உம் உள்ளதென மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‘இந்தப் படம் கண்டிப்பாகக் காலத்தின் கல்வெட்டாக இருக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்கு இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தான் காரணமெனப் பார்க்கும் பொழுதே தெரியும்படி உள்ளது’ எனப் புகழ்ந்தார். கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதி தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாண்டிச்சேரியில் ...
“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’. எதிர்பார்த்தது போல் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்க புஷ்பத்தின் கணவராகப் படத்தில் நடித்திருக்கும் மைண்ட்-வாய்ஸ் விவேக், "தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்குக் கிடைத்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில், ‘சிங்கத்தின் பாலாக இருந்தால் அதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப்பார். அதே போல் தனுஷ் - சிங்கத்தின் பால்; தாணு ஒரு தங்கக் கிண்ணம். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும் ...