32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

சத்யராஜ்

28 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 2
செய்திகள் வரிசை (பக்கம் 2)
“இனி வில்லன் ரூட்க்குத் தயார் கண்ணு!” – எதற்கும் துணிந்த சத்யராஜ் சினிமா

“இனி வில்லன் ரூட்க்குத் தயார் கண்ணு!” – எதற்கும் துணிந்த சத்யராஜ்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் […]

02/03/2022 Dinesh R
சூர்யா: நடிப்பு நாயகன் – புரட்சி நாயகன் சினிமா

சூர்யா: நடிப்பு நாயகன் – புரட்சி நாயகன்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் […]

02/03/2022 Dinesh R
கனா விமர்சனம் சினிமா

கனா விமர்சனம்

மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் ‘கனா’க்கள் திரை கண்டுள்ளது. “விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க” என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை. விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் […]

23/12/2018 Dinesh R
நோட்டா விமர்சனம் சினிமா

நோட்டா விமர்சனம்

ஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த் ஷங்கரால் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வினோதன் தனது மகன் வருணிடம் முதலமைச்சர் பதவியை, இரண்டு வாரத்திற்குக் கைமாற்றிவிட்டு தன் மீது நீதிமன்றதிலுள்ள வழக்கைச் சந்திக்கத் தயாராகிறார். வழக்கின் தீர்ப்பு வினோதனுக்குப் பாதகமாகி விட, வருண் முதலமைச்சர் பதவியில் நீடிக்குமாறு ஆகிவிடுகிறது. சொந்த கட்சி ஆட்களின் அத்துமீறல், இயற்கைச் சீற்றம், குடும்பத்தின் மீதான உயிர் அச்சுறுத்தல் என வருண் தனக்கு முன்னுள்ள சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் […]

06/10/2018 Dinesh R
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம் சினிமா

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

காஷ்மீர் ஆசிபா, அயனாவரம் சிறுமி போன்றவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்ணுறும்பொழுது, மனிதரகள் இவ்வளவு ஆபத்தானவர்களா என்ற நடுக்கம் அடிமனதில் இருந்து எழுந்தது. சக மனிதர்கள் என்று மனதில் எழும் நெருக்கம் மெல்ல அமிழ்ந்து, இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் அத்தகைய பயத்தை விதைப்பவர்களில்லை. சிறை சென்றுவிட்டு வரும் மாமன் டேவிட்டும், ரோட்டில் அநாதையாகத் திரிந்து அடிபட்டு வளரும் மருமகன் தாமஸும் இணைந்து ஸ்வேதாவைக் கடத்துகின்றனர். ஸ்வேதா, தாமஸின் காதலி. […]

24/08/2018 Dinesh R
மெர்சல் விமர்சனம் சினிமா

மெர்சல் விமர்சனம்

மெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள் கொள்ளலாம். இந்தத் தலைப்பை அட்லி, இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தின் மெர்சலாயிட்டேன் பாடலின் வரிகளில் இருந்து ‘இன்ஸ்பையர்’ ஆகி எடுத்திருக்கச் சாத்தியங்கள் உள்ளன. கபிலனின் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தால், பயத்தால் மிரள்வது மெர்சல் அல்ல என்று புரியும். ஒரு திகைப்பில், ஆச்சரியத்தில் எழும் பரவச உணர்வு என்பதாக மெர்சலுக்குப் பொருள் வருகிறது. படத்தில் அத்தகைய மெர்சல் உணர்வு மூன்று நபர்களுக்கு எழுகிறது. முதலாவதாக, ஃபிரான்ஸ் கேஃபே-வில் […]

19/10/2017 Dinesh R
சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’ சினிமா

சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ரசிக்கும்படி திரையில் கொண்டு வருவது சத்யராஜின் பாணி. அதுவே அவரை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமாக இருந்தால்? படத்தை அவரே, நாதாம்பாள் பிலிம் பாக்டரி சார்பாகத் தயாரித்து நடிப்பார். “இயக்குநர் கார்த்திக் என்னிடம் வந்து கதையைச் சொன்ன அடுத்த நொடியே, இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தின் கதையானது என்னைக் கவர்ந்துவிட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் புதுமுகமாக இருந்தாலும், அவரின் […]

22/07/2016 Dinesh R
கெத்து விமர்சனம் சினிமா

கெத்து விமர்சனம்

கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட துளசி ராமனை அவரது மகன் சேது எப்படி மீட்கிறான் என்பது தான் படத்தின் கதை. சேதுவாக உதயநிதி ஸ்டாலின். நகைச்சுவைப் படத்திலிருந்து அடுத்த கட்ட சோதனையை அழகாகச் செய்து பார்த்துள்ளார். சந்தானம் இன்றி வரும் உதயநிதியின் முதல் படம் என்ற விசேஷப் பெருமை இப்படத்திற்கு உண்டு. கதையின் நாயகனாக இருப்பதால், உதயநிதியின் முந்தைய கதாபாத்திரங்களை விட நூலகத்தில் பணி புரியும் சேது கொஞ்சமாக ஈர்க்கவே செய்கிறார். புத்தகத் திருடியாக வருகிறார் எமி […]

15/01/2016 Dinesh R
ஒருநாள் இரவில் விமர்சனம் சினிமா

ஒருநாள் இரவில் விமர்சனம்

போதையில் சபலத்துக்கு ஆட்படும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினன், ஒருநாள் முழுவதும் அனுபவிக்கும் மான ரோஷப் பதற்றம்தான் படத்தின் கதை. 2012 இல் வெளியான ‘ஷட்டர்’ எனும் மலையாளப் படத்துக்கு முறைப்படி உரிமை வாங்கி, ரீமேக் செய்து தமிழ்ப் படமாக வழங்கியுள்ளார் இயக்குநர் விஜய். இசை, பாகுபலியைத் தொடர்ந்து, சத்யராஜின் மற்றுமொரு பிரம்மாண்டப் பரிணாமமாக அவர் நடித்திருக்கும் சேகர் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். அவரின் தவிப்பும் பதற்றமும் பார்வையாளரையும் பீடிக்கிறது. அவருக்கு ஏற்படும் கோபம், அதாவது மகள் மீதான கோபமன்று, உடனிருப்போரின் சுயரூபம் […]

21/11/2015 Dinesh R
பாகுபலி விமர்சனம் சினிமா

பாகுபலி விமர்சனம்

(பாகுபலி – தொடக்கம்) இந்தியாவின் மிக மிகப் பிரம்மாண்டமான படம். மிரட்டியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. பேரருவியின் அடிவாரத்தில் வளரும் ‘ஷிவு’-வுக்கு, மலை மீதேறிப் பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசை, மிகச் சிறிய வயது முதலே கனலாய் எழுகிறது. பலமுறை முயன்றும் மலையில் ஏற முடியாமல் வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறான். அருவியில் இருந்து விழும் மரத்தாலான முகமூடியின் சொந்தக்காரியை எப்படியும் காண வேண்டுமென்ற காதலின் உந்துதலில், ஒருநாள் மலையில் ஏறிவிடுகிறான். அங்கு யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் ஷிவு-வுக்கும் என்ன […]

10/07/2015 Dinesh R
இசை விமர்சனம் சினிமா

இசை விமர்சனம்

தனக்குக் கிடைக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் தனது திறமை மட்டுமே காரணமென நம்பும் ஒருவன், அவனுக்கு ஏற்படும் தொய்வுக்கும் இயலாமைக்கும் மட்டும் மற்றவர் செய்யும் சதிதான் காரணமென நம்புவான். செயலூக்கம் குறைந்த சாமானிய மனிதனின் கற்பிதமிது. அப்படித்தான் மகத்தான இசைக் கலைஞரான வெற்றிச்செல்வன் தன் சறுக்கலுக்கு தனது சிஷ்யன் ஏ.கே.ஷிவாதான் காரணமென கோபம் கொள்கிறார். தனது கோபத்தை வெற்றிச்செல்வன் எப்படித் தணித்துக் கொள்கிறார் என்பதுதான் இசை படத்தின் கதை. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் படம் […]

03/02/2015 Dinesh R
வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம் சினிமா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

கைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் (!?) காரணமான நபர் எனக் கூறலாம். அதாவது பொறுப்பற்ற கதாபாத்திரங்கள் நகைச்சுவையாளர்கள் என்ற நிலையில் இருந்து நாயகர்களாக மாறி விட்டனர்.  சிலுக்குவார்பட்டி சமூக ஆர்வலன் போஸ்பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நிறுவி தலைவராக இருப்பவன். மண் கடத்தல், பால்ய விவாகம் போன்றவற்றைத் தடுப்பவன். ஊர் பெரியவரான சிவனாண்டியின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை. போஸ்பாண்டியாக சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்தினைக் […]

09/09/2013 admin