
அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து
அன்போடு “ஸ்வீட்டி” என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி, 'காட்டி' எனும் அதிரடியான ஆக்ஷன்-க்ரைம் டிராமாவில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில், காட்டி ட்ரைலர் குறித்துப் பட வெளியீட்டிற்கு முன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து, நீண்டநாள் இணை நட்சத்திரமும் நண்பருமான அனுஷ்கா ஷெட்டிக்கு இதயம் கனிந்த குறிப்பை எழுதியுள்ளார்.
அவர், “காட்டி ரிலீஸ் ட்ரைலர் ரொம்பத் தீவிரமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் ஸ்வீட்டி. முழுக் குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!” என்று கூறியுள்ளார்.
கிரிஷ் ஜகர்லாமுடி இயக்கியுள்ள காட்டி, நிஜத்தன்மை நிறைந்த பின்னணியில் நடைபெறும் சுவாரசியமான சினிமா அனுபவமாக அமைந்துள்ளது. அனுஷ்கா ஷெட்டியுடன், விக்ரம் பிரபு, சைதன்ய ராவ் மடாடி, ஜகபதி பாபு ஆகியோர...