Shadow

Tag: மாரிமுத்து

Trauma விமர்சனம் | Trauma review

Trauma விமர்சனம் | Trauma review

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ட்ராமா என்றால் அதிர்ச்சி, வேதனை எனப் பொருள் கொள்ளலாம், அவ்வேதனை மன அதிர்ச்சி, புற அதிர்ச்சி என இரண்டையும் குறிக்கும். திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை என மன வேதனையில் உள்ளார் சுந்தரின் மனைவி கீதா. ஆட்டோ ஓட்டும் தந்தைக்கு ஒரு கால்-டேக்ஸி வாங்கித் தந்துவிட்டுத்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவேண்டும் என நினைக்கும் செல்வி கர்ப்பம் ஆகிவிடுகிறாள். இரண்டு தத்துக்குட்டி கார் திருடர்கள் காரில் பிணத்தோடு காரைத் திருடி போலீஸில் சிக்கிக் கொள்கிறார்கள். இம்மூன்று கதையும் ஒரு மெடிக்கல் ஸ்காமில் (Scam) வந்து இணைவதுதான் படத்தின் முடிவு. கார் திருடர்களாக மதன் கோபாலும், ஸ்மைல் செல்வாவும் நடித்துள்ளனர். படத்தில் அவர்களது பங்கு முக்கியம் என்ற போதும், நகைச்சுவைக்காக வலிந்து திணிக்கப்பட்ட அசுவாரசியமான காட்சிகளும் வசனங்களும் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. ஆட்டோ ஓட்டுநராக மறைந்த மாரிமுத்த...
லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

சினிமா, திரை விமர்சனம்
இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள் ஒன்று கீழே கிடக்கிறது. அதை நான்கு பேர் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்குள் சண்டை வேண்டாமென சரிசமமாகப் பகிர்ந்து குடிக்கலாம் என பாருக்குப் போகிறார்கள். சைட் டிஷாக லெக் பீஸ் வருகிறது. ‘கண்ட இடத்தில் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை உண்ணும் கோழியின் லெக் பீஸைச் சாப்பிட்டால் வீண் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்பது என் ஐதீகம்’ என்கிறார் திடீர் திருப்பதி. மிமிக்ரி கோபி, குயில் குமார், பேய் முருகேசன் ஆகிய மூவரும் லெக் பீஸ் சாப்பிடுகின்றனர். பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். உயிர் போகும் அப்பிரச்சனையிலிருந்து எப்படி அந்த நால்வரும் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. மிமிக்ரி கோபியாக ரமேஷ் திலக், திடீர் திருப்பதியாகக் கருணாகரன், குயில் குமாராக C. மணிகண்டன், பேய் முருகேசனாக ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்ரீநாத் இயக்க, ஹீரோ சினிமாஸ் C. மணிகண்டன் தயாரித்த...
தூக்குதுரை விமர்சனம்

தூக்குதுரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பழங்கால காதல் கதை, பழங்கால பேய்க்கதை இரண்டும் சேர்ந்தால் அதுதான் தூக்குதுரை திரைப்படத்தின் கதை. இனியாவின் குடும்பம் திருவிழாக்களில் ஊரின் முதல் மரியாதையைப் பெறும் ஜமீன்தார் குடும்பம். திருவிழாக்களில் புரொஜெக்டர் மூலம் படம் ஓட்டிக் காட்டும் யோகிபாபுவிற்கும் இனியாவிற்கும் காதல் மலர்கிறது. தங்கள் காதலைக் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு ஊரைவிட்டு  ஓட முயற்சி செய்கிறார்கள். ஊர் மக்களிடம் மாட்டிக் கொள்ளும் அவர்களில் யோகிபாபுவை இனியா குடும்பம் ஊர் மக்களோடு சேர்ந்து ஒரு கிணற்றில் வைத்து எரித்துக் கொன்றுவிடுகிறார்கள்.  அந்த கிணற்றுக்குள் ஜமீன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு விலைமதிப்புமிக்க கிரீடம் மாட்டிக் கொள்கிறது. அதை எடுக்க வருபவர்களை யோகிபாபு பேயாக வந்து மிரட்டுகிறார். அதை மீறி கிரீடத்தை கைப்பற்றினார்களா இல்லையா என்பது மீதிக்கதை. யோகிபாபு இருந்தாலே ...
மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளையராஜாவின் அதி தீவிர விசிறியான ஜீவாவிற்கு மெஹந்தியைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களுக்கிடையே நிகழ்த்தும் சர்க்கஸ் விளையாட்டுதான் படத்தின் கதை. ஒளிப்பதிவாளர் செல்வக்குமார் பொயட்டிக் டோனைப் படத்திற்கு செட் செய்துள்ளார். கதை பூம்பாறையில் நடக்கிறது. கூடவே பின்னணியில் இளையராஜாவின் இசை. காதலர்கள் ஓடிப் போகக் காரணமான இளையராஜா A1 அக்யூஸ்ட் என்றும், ராஜகீதம் மியூசிக்கல்ஸ் வைத்திருக்கும் ஜீவா A2 என்றும் வசனம் வைத்து, இளையராஜாவின் இசையையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வர முயன்றுள்ளார் இயக்குநர் சரவண ராஜேந்திரன். ஆனால், இளையராஜாவின் இசை கதையோடு இயைந்து ஒரு மாயத்தை நிகழ்த்தத் தவறி விடுகிறது. அரசியல் பேசும் ஒத்தவெடி கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், நாயகனின் நண்பராக நடித்துள்ளார். ஆனால் நகைச்சுவைக்கோ, அரசியல் நையாண்டிக்கோ பெரிதும் அவர் உதவவில்லை. படத்தின் குறைகளில் ஒன்று, எந்த...
தா தா 87 விமர்சனம்

தா தா 87 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தாதாவாக (Don) 87 வயது சாருஹாசனும், அவரது காதலி கீதாவாக 80 வயது சரோஜாவும் நடித்துள்ளனர். சரோஜா, கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சாருஹாசனை முன்னிறுத்தி இயக்குநர் விஜய் ஸ்ரீ, படத்திற்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்துக் குழப்பியுள்ளார். அந்தக் குழப்பம் படத்தின் முதற்பாதி முழுவதிலுமே கூடத் தொடர்கிறது. மஞ்சள் துண்டு (பாமக), நீலத்துண்டு (விசிக) எனத் தெளிவில்லாத அரசியல், அவர்களை இயக்கும் ஆண்டவரின் அண்ணனான தாதா சத்யா, அதை விரும்பாத எம்.எல்.ஏ. என முதற்பாதி பயணிக்கிறது. பிறகு, கவிதை போன்ற இரண்டாம் பாதி தொடங்குகிறது. ஜெனியாக நடித்திருக்கும் ஸ்ரீபல்லவி விஸ்வரூபமெடுக்கிறார். அவரது தந்தை ஜனா நாயுடுவாக ஜனகராஜ் நடித்துள்ளார். ஜனா மகள் ஜெனி என்பது குழப்பினாலும், மகள் விருப்பப்பட்ட பெயரை வைத்துக் கொள்ள அனுமதிக்கும் மிக்க உறுதுணையான அப்பாவாக நடித்துள்ளார் ஜனகராஜ். சாய் தீனாவை ஞாபகப்படுத்தும...
கொடி விமர்சனம்

கொடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். அதை விடக் குறிப்பிடத்தக்க விஷயம், தனுஷ்க்குச் சமமான முக்கியத்துவத்தோடு த்ரிஷா பாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளதே! நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் படத்தில், நாயகியொருவருக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது சொல்லொன்னா மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலால் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமென நம்பும் கருணாஸ், தனது இரு மகன்களில் ஒருவரான கொடியின் முன் தீக்குளித்து விடுகிறார். அதன் பின், கட்சியே கதியெனக் கிடக்கும் கொடிக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ருத்ரா மீது காதல் வருகிறது. எதிரெதிர் கட்சிகளில் இருக்கும் தனுஷ் - த்ரிஷா காதல் என்னானது என்றும், தம்பி தனுஷ் ஏன் அரசியலுக்குள் வருகிறார் என்பதும்தான் கதை. தனுஷின் ஒல்லியான உருவம் பேராசிரியர் கதாபாத்திரத்திற்கும் அந்நியமாக இருக்கிறது; அரசியல்வாதி பாத்திரத்தோடும் ஒட்டவில...