என் இனிய Agathiya Game App – ஜீவா | ராஷி கண்ணா | பா.விஜய்
தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், "அகத்தியா" படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாகட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்தக் கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு, படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
இந்த கேம் ஆப் வடிவமைப்பி...