Shadow

Tag: அனிருத்

விவேகம் விமர்சனம்

விவேகம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் அஜித்தும், இயக்குநர் சிவாவும் மூன்றாம் முறையாக இணைகின்றனர். கிராமம், நகரம் என்று பயணித்தவர்கள், தேசிய எல்லைகளைக் கடந்து, Counter Terrorist Squad இல் பணிபுரியும் சர்வதேசக் காவலனாக அஜித்தை ப்ரோமோட் செய்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைக்க நினைக்கும் நிழல் சமூகத்திற்கு விலைக்குப் போய் துரோகமிழைக்கிறார்கள் ஏஜென்ட் ஏ.கே.வின் நண்பர்கள். துரோகத்தில் இருந்து மீண்டு, நண்பர்களையும் பழி வாங்கி, உலகையும் எப்படிக் காக்கின்றார் என்பதுதான் படத்தின் ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை. அக்ஷரா ஹாசனின் அத்தியாயம் மிக அழகாய் வந்துள்ளது. நடாஷா என்ற பாத்திரத்தில் அவர் முகம் காட்டும் பதற்றம், அவரது ஹேர்ஸ்டைல், உடை என எல்லாமுமாகச் சேர்ந்து அற்புதமாய் உள்ளது. நடாஷா ஒரு ஹேக்கர் என்பதைக் கேள்விகளின்றி ஏற்க முடிகிறது. அவரைப் பிடிக்க, அஜித் செயல்படுத்தும் பிளான் 'பி (B)' ரசிக்க வைக்கிறது. குண்டு மழைக்கு நடுவில் அநாயாசமாய்ப் ...
‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு

‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு

சமூகம்
விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு அணிகளில் ஒன்றான 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' நேற்று சென்னையில் தங்கள் அணியின் வீரர்களை க்ரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய அணியின் தலைச் சிறந்த ஆட்டக்காரரும், அதிரடி ஓப்பனிங் வீரருமான விரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். "தமிழ்நாடு பிரிமீயர் லீக்' வெறும் ஒரு கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டி, மாநில அளவில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாகவும் விளங்குகின்றது. இந்த 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணிக்காக நீங்கள் விளையாடும் ஆட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் காண இருக்கிறது. இதன் அணியில் இருந்து பல வீரர்கள் ஏ-கிளாஸ் கிரிக்கெட்டிலும், சர்வதேப் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு என் வாழ்த்துகள்" என்று 'மதுரை சூப்பர் ஜெய...
தங்கமகன் விமர்சனம்

தங்கமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன் தந்தை மீது விழும் பழியை எப்படி தங்கமகனான தமிழ் கலைகிறான் என்பதே படத்தின் கதை. ஹேமா டிசோசாவாக எமி ஜாக்சன். முடியைத் தூக்கிச் சீவிய முன் நெற்றியோடு, சுடிதார் அணிந்து வரும் அவர் மிக அந்நியமாகத் தெரிகிறார். 'ஹீரோ ஃப்ரெண்ட்' ஆக வரும் சதீஷ் முதற்பாதி கலகலப்புக்கு உதவுகிறார். தனுஷ் மீசையை மழித்தால் கல்லூரி மாணவர்; மீசை வைத்தால் பொறுப்பான மகனும் மனிதனும் ஆகி விடுகிறார். ஆனால் சதீஷின் உடல் வாகிற்கு, அத்தகைய  மாற்றம் பொருந்தவில்லை. மறதியில் தவிப்பவராகவும், பாசமானதொரு தந்தையாகவும் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். எனினும் வழக்கமான அவரது கலகலப்பு மிஸ்ஸிங். வி.ஐ.பி.யில் அம்மா சென்ட்டிமென்ட் என்றால் இப்படத்தில் அப்பா சென்ட்டிமென்ட்டைத் தொட்டுள்ளார் இயக்குநர் வேல்ராஜ். தனுஷின் அம்மாவாக ராதிகா சரத்குமாரும், அத்தையாக சீதாவும் நடித்துள்ளனர். சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், ஜெயப்ரகாஷ் அழுத்தமான கதாபா...
வேதாளம் விமர்சனம்

வேதாளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு 'தல' தீபாவளி. தன் தங்கைக்காகவே வாழும் பாசக்கார அண்ணன் கணேஷ். யாரிந்த கணேஷ், தன் தங்கைக்காக என்ன என்னெவெல்லாம் செய்கிறான் என்பதே படத்தின் கதை. வீரம் போலில்லாமல், இயக்குநர் சிவா கதைக்குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். எனினும் முதல் பாதியின் அசுவாரசியம் முகத்தில் அடிக்கிறது. கதைக்குக் கிஞ்சித்தும் உதவாத நகைச்சுவைக் காட்சிகள், 'உனக்கு குழந்தைச் சிரிப்பு' என்ற தொடர் முகஸ்துதிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அண்ணன் – தம்பி பாசத்தை ரசிக்கும்படியாகச் சொல்லிய சிவா, அண்ணன் – தங்கை பாசத்தை ரசிக்கும்படி சொல்லத் தவற விட்டுவிட்டார். ‘என்னடா இது?’ என்று யோசனையில் இருக்கும்போதே, வான வேடிக்கையுடன் ‘தீபாவளிக் கொண்டாட்டம்’ படத்தின் இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. அஜித் குமாரின் வில்லத்தனம் அட்டகாசமாய் மிளிர்கிறது. அவர் வில்லன்களைப் பார்த்துப் பழிப்பு செய்யும் விதமாய்ச் சிரிப்பதும், சிரித்துக் கொ...
‘நண்பேன்டா’ அனிருத்

‘நண்பேன்டா’ அனிருத்

சினிமா, திரைத் துளி
யுவன் சந்திரசேகர் ஷெட்யூல் ரொம்ப டைட்டாக இருந்ததால், வடகறி படத்திலிருந்து ஒரே ஒரு மெலடியுடன் விலகிக் கொண்டுள்ளார். படத்தை விரைவாக முடிக்க வேண்டுமென்பதால், படத்தில் வேறு இசையமைப்பாளரை உபயோகிக்கவும் யுவன் முழுமனதுடன் சம்மதித்துள்ளார். இந்நிலையில் அனிருத், வடகறி படத்தில் இசையமைக்க 22 வயதாகும் தனது நண்பர் விவேக் சிவாவைப் பரிந்துரைத்துள்ளார். கிளாச்சிகல் மியூசிக் பயின்ற விவேக் சிவா, அனிருத் இசையமைத்த 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டம் உலகம், வேலை இல்லா பட்டதாரி போன்ற படங்களில் சவுண்ட் இன்ஜினியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் சிவா, 23 வயதாகும் மெர்வின் சாலமனுடன் இணைந்து, 4 பாடல்களை வடகறி படத்திற்காக கம்போஸ் செய்துள்ளனர். லண்டன் ட்ரினிட்டி ஸ்கூலில் செர்ட்டிஃபை செய்யப்பட்ட பியானிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பின்னணி இசையையும் இந்த இணையே கம்போஸ் செய்கின்றனர். இ...
ஆர்வக்கோளாறில் அனிருத்

ஆர்வக்கோளாறில் அனிருத்

சினிமா, திரைத் துளி
இளம் இசையமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிக்க வரும் பல வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரையுலகப் பணி  என்று திட்டவட்டமாக இருக்கும் அனிருத், அதை உரக்கச் சொல்லியும் வருகிறார்.'ஆக்கோ' - சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்துக் கேட்டு வியந்த கதை. தன்னுடைய பங்களிப்பு ஓர் இசையமைப்பாளராக மட்டுமே  என்று கூறியதோடு மிகச் சிறந்த பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து  இருக்கிறார். இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குநர் எம்.ஷ்யாம் குமாரும்,  தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில்  அனிருத்தைப் பிரதானப்படுத்தி ஃபர்ஸ்ட்-லுக் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே  அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.படத்தின் ஒளிப்பதிவாளர் சிவா ...
வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
சிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் கால் பதிக்கிறார் கிருத்திகா உதயநிதி. தனது  முதல் இரண்டு படங்களின் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ள அனிருத் அந்த வேட்டையை மேலும் தொடர்கிறாரா என்று பார்ப்போம்.படத்தில் மொத்தம் 7 பாடல்கள். 1. பாடல் - ஹே காற்றில் ஏதோ புதுவாசம்  பாடியவர்கள் - பபோன், மரியா  வரிகள் - நா.முத்துக்குமார்  பர்பி படத்தில் வரும் க்யோன் பாடல் மூலம் பிரபலமடைந்த பபோன்,  தமிழில் பாடும் முதல் பாடல் இது. கலக்குகிறார் மனிதர்.இவருக்கு மறுமுனையில் பாடகர் மரியா. இவர் ஏற்கனவே ரஹ்மான் இசையில் வெளிவந்த கடல் படத்தின் "அடியே" பாடலை பாடியவர். கிதார் மற்றும் சேக்ஸோஃபோனில் தொடங்கி பல இன்ஸ்ட்ருமென்ட் மூலம்  ஒரு புத்துணர்ச்சியூட்டும் பாடலைக் கொடுத்துள்ளார் அனிருத்.2. பாடல் - ஒசக...
எதிர்நீச்சல் விமர்சனம்

எதிர்நீச்சல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உங்க பெயர் குஞ்சிதபாதம் என்றிருந்திருந்தால்.. உங்க நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தப் படத்தின் நாயகனுக்கு அது தான் பிரச்சனை. அவனது பெயருடன் எதிர்நீச்சல் போட்ட வண்ணம் உள்ளான்.நாயகன் ஹரீஷாக சிவகார்த்திகேயன். இவரது பூர்வாசிரம பெயர் தான் குஞ்சிதபாதம். அசட்டுத்தனமாய் சிரித்தபடி முகத்தை வைத்திருப்பதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். விஜய் டி.வி.யில் பெற்ற அடையாளங்களை, 3 படத்திற்குப் பிறகு முடிந்த மட்டும் உதறியுள்ளார். நாயகி கீதா மிஸ்ஸாக ப்ரியா ஆனந்த். வாமனன், புகைப்படம், 180 என தமிழில் முன்பே நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் கம்-பேக்கான இங்கிலீஷ் விங்கிலீஷிலும் நடித்திருப்பார். ஆனால் இப்படம் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். இப்படத்தில் குழந்தைகளுடன் சிரித்து சிரித்துப் பேசிப் பழகும் ஆங்கில ஆசிரியையாகவும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பணம் 'கலெக...