Shadow

Tag: Banaras movie

பனாரஸ் விமர்சனம்

பனாரஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
த்ரில்லர் கதை போல் துவங்கி, காதல் கதையாகப் பயணித்து டைம்லூப் கதையாக முடிகிறது பனாரஸ். ஹீரோ ஜையீத் கான் தன் பணக்காரத்தனத்தை சவால்களிலும் ஜாலி கேளிக்கைகளிலும் காட்டக்கூடியவர். அவர் தன் நண்பர்களின் சவால் ஒன்றை ஏற்று நாயகி சோனல் மான்டிரோவுடன் அவருக்குத் தெரியாமல் ஒரு புகைப்படம் எடுத்து விடுகிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் பரப்பப்படுகிறது. அதனால் மோனலுக்குச் சிக்கல்கள் எழ, அவர் படிப்பு எல்லாவற்றையும் துறந்து தன் உறவினர் வசிக்கும் காசிக்குச் செல்கிறார். குற்றவுணர்ச்சியில் விழும் நாயகன் மன்னிப்பு கேட்பதற்காக நாயகியைத் தேடிச் செல்கிறார். பாதிக்கதையில் டைம்லூப் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார். முதற்படம் என்ற சுவடு தெரியாமல் நடித்துள்ளார் ஜையீத்கான். எமோஷ்னல் காட்சிகளில் வருங்காலங்களில் நன்றாகத் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையை இப்படத்தில் கொடுத்துள்ளார். நாயகி சோனல் மான்டிரோ பார்ப்பதற்கு அழகாக இ...
பனாரஸ் – நவம்பர் 4 வெளியீடு

பனாரஸ் – நவம்பர் 4 வெளியீடு

சினிமா, திரைத் துளி
''இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். 'பனாரஸ்' படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்'' என 'பனாரஸ்' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஜையீத் கான் தெரிவித்துள்ளார். கன்னடத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'பனாரஸ்'. பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கன்னடத் திரையுலகத்தின் 'சேலஞ்சிங் ஸ்டார்' தர்ஷன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன் 'பனாரஸ்' படத்தில் இடம்பெற்ற பாடல்களும், படத்தின் முன்னோட்டமும் வருகை ...
‘மாய கங்கா..’ பாடல் | பனாரஸ்

‘மாய கங்கா..’ பாடல் | பனாரஸ்

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான், கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனைத் தமிழ்த் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார். கன்னடத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்’. இந்தப் படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தp படத்தை என் ...