Shadow

Tag: BB2 Tamil

பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

சமூகம், தொடர்
மூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நெதர்லாந்துக்காரர்கள் நடத்துவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார் போல! இதற்கே அவர் ஸ்டார் விஜய் டி.வி. மூலமாகக் கமல் ஹாசனைச் சந்தித்து விட்டு தான் பிக் பாஸிற்குள் வந்தார். எனினும், மற்ற அனைவரும் தமிழில் பேசும்பொழுது, கேமிரா முன் பிக் பாஸிடம்ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யும் பொழுது, ‘மமதி எனக்குப் புரியாத மாதிரி இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க; ரம்யாவோட ஹேர்ஸ்டைல், பாடி லேங்வேஜ் எல்லாம் இங்கிலீஷ்க்காரங்க மாதிரி இருக்குது’ எனத் தெள்ளத்தெளிவாகக் காரணத்தைத் தமிழில் அடுக்குகிறார். இதில் ஆகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால், வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனனி ஐயர், வைஷ்ணவியை நாமினேட் செய்து சொன்ன காரணம், ‘அவங்க நிறைய இங்கிலீஷ்ல பேசுறாங்க’ என்பது. முதல் நாளிலேயே, யார்க்கு யாரைப் பிடிக்கவில்லை என லேசாகக் கோடி...
பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

சமூகம், தொடர்
பிக்பாஸ் சீசன் 2-இல் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், ‘ஏன் பிக்பாஸிற்கு வருகிறேன்?’ என்பதற்குச் சொன்ன காரணம், “பிக் பாஸில் கலந்து கொண்டவர்கள் வெளியில் வந்ததும் சொல்வது, தன்னுள் மாற்றம் நிகழ்கிறது என்கிறார்கள். இந்த நூறு நாளில் அப்படியொரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கலந்து கொள்கிறேன்” என்றார்கள். சீசன் 1-இல் கலந்து கொண்டவர்களில், அப்படி யாருக்கு என்ன மாற்றம் நிகழ்ந்தது என நமக்குக் கண் கூடாகத் தெரியாது. அவர்களாக, ‘இன்னது’ எனச் சொல்லும் வரை. அப்படிச் சொல்வதும் உண்மைக்கு எந்தளவுக்கு நெருக்கம் என்பதும் அளக்க இயலாது. ஆனால், பிக் பாஸ், முதல் சீசனுக்கும் இரண்டாம் சீசனுக்கும் இடையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் பெயர் கமல் ஹாசன். மக்கள் நீதி மய்யத்தின் தொடக்கத்திற்கு முன், பின் என இரண்டு சீசன்களையும் முறையே கொள்ளலாம். பிக் பாஸ் 1-இலே கூட கமல் ஹாசன் அதை ஒரு ப்ளாட்ஃபார்மாகப் பயன்ப...