
பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!
நேற்று சரவணன் போனதுக்கு வீடே அழுது கொண்டிருந்ததது. ஆனால் இன்று அதோட சுவடே இல்லாமல் எல்லோரும் ஜாலியாக இருந்தனர். இந்த சோஷியல் மீடியா உலகத்தில் சோகமாக இருக்கிறதுக்கோ துக்கப்படறதுக்கோ கூட இடமே இல்லை. ஏனெனில் எல்லா உணர்ச்சிகளும் சடுதியில் மாறிவிடும். நமக்கு ஆதர்சமாக விளங்கிய நபர் இறந்த செய்தியைப் படித்துவிட்டு சோகமாக ஸ்க்ரோல் செய்தால், அடுத்த பதிவே ஒரு மீம் வந்து சிரிக்க வைத்துவிடும். இந்தக் கலவையான உணர்வுகள் தொடர்ந்து மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கிறது. இழவு வீட்டில் கூட, சாவை விசாரித்துவிட்டு வெளியே வருபவர் ஃபோனை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதைப் பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிற பழக்கங்கள் சோஷியல் மீடியாவினால் பாதிக்கப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. நமது எந்த ஓர் உணர்வுக்கும், அது துக்கமோ, சந்தோஷமோ அதற்கான ஆயுள் ரொம்பக் க...