பிக் பாஸ் 3: நாள் 91 | வெளுத்தது யார் சாயம்?
ஒரு கேள்வி கேட்டால், அதற்கு சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்றதில், கவின் எக்ஸ்பெர்ட் ஆகிட்டாரென நேற்று எழுதியிருந்தேன்.
'சாயம் வெளுத்துப் போச்சு' டாஸ்க் பற்றிப் பேசிக் கொண்டு இருந்த போது, அதிகபட்ச கேள்விகள், கவின்-லாஸ்க்கு தான் இருந்தது. தொலைந்து போனவர்கள் கேள்விக்கு, எல்லோரும் கவின் - லாஸ்க்கு தான் திரவத்தை ஊத்தினர். சேரன் மட்டும் கவின் - முகினுக்கு ஊத்தினார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க என்பது தான் கேள்வியே!
'இந்த வாரம் நாங்க நல்லா தான் டாஸ்க் செய்றோம். ஆனா சும்மா உக்காந்து பேசினா கூட, அவங்க பேசிட்டு இருக்காங்கன்னு எங்களுக்கு பின்னாடி பேசறாங்க. அதை அழிக்க முடியாது, எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வெளிய போனா தான் இது அழியும்' என லாஸ் பதில் சொன்னார்.
பின்னாடி பேசறாங்க என யாரைச் சொல்கிறார்? சேரனையும் ஷெரினையுமா? அப்படி யாரும் பேசவே இல்லை. இவர்களுக்கே அப்படித் தோன்றியிருக்கு. 'எல்லோர...