Shadow

Tag: Captain Marvel

தி மார்வெல்ஸ் விமர்சனம்

தி மார்வெல்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
லிட்டில் வுட்ஸ் (2018), கேண்டிமேன் (2021) ஆகிய படங்களை இயக்கிய நியா டகோஸ்டாவின் மூன்றாவது படம், ‘தி மார்வெல்ஸ்’ ஆகும். நியா, மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் முதல் கறுப்பினப் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றாற்போல், படத்தில் மூன்று பெண் சூப்பர் ஹீரோக்கள் என்பது இன்னொரு சிறப்பம்சம். சூப்பர் ஹீரோ படமென்றால், ஒரு பலமான சூப்பர் வில்லன் வேண்டும். ஆனால் அதி சூப்பர் வில்லனான தானோஸைத் தடுக்க, அத்தனை சூப்பர் ஹீரோக்களும் இணைய வேண்டியதாகி இருந்தது. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் முடிவில், தானோஸ் ஒரு புன்னகையுடன், ‘என்னை விட சூப்பர் வில்லன் யாரிருக்கா?’ என ஒரு சொடுக்கில், மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களுக்கே உரிய கலகலப்பையும் சுவாரசியத்தையும் தன்னுடனேயே கொண்டு சென்றுவிட்டார். அதற்குப் பின்னான மார்வெலின் படங்கள், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ரகமாக உள்ளது. இணை பிரபஞ்சம், பன்னண்டம்,...
கேப்டன் மார்வெல் விமர்சனம்

கேப்டன் மார்வெல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' படத்தில் தானோஸினை மண்ணைக் கவ்வச் செய்யும் போகும் சக்தி எது? கேப்டன் மார்வெல் என்ற க்ளூவினை 'அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார்' படத்தில் கொடுத்திருப்பார்கள். யார் அவர், அவரது சக்தி என்ன போன்ற விஷயங்களுக்குப் பதிலாக வந்துள்ளது கேப்டன் மார்வெல் படம். மார்வெலின் கதை சொல்லும் பாணிக்கு, இப்படம் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், கேப்டன் மார்வெல் தானோஸ்க்குப் பெரும் சவாலாக இருப்பார் எனும் நம்பிக்கையைத் தருகிறது. யூ.எஸ். ஏர் ஃபோர்ஸில் பைலட்டாக இருக்கும் கெரோல் டென்வெர்ஸ் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என நான்-லீனியராகச் சொல்லியுள்ளனர். வொண்டர் வுமன் படத்தில் கேல் கேடோட் கதாபாத்திரத்தின் நோக்கம் மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், கேப்டன் மார்வெலான ப்ரீ லார்சனுக்கு அந்தக் கொடுப்பிணை வாய்க்காததுதான் படத்தின் ஈர்ப்பளவில் சுணக்கம் ஏற்படுவதற்குக் காரணம். ...