தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்
கடவுள்களைக் கொல்லும் கோர், நிழல் உருவங்களை ஏவி புது ஆஸ்கார்டின் குழந்தைகளைக் கடத்தி விடுகிறான். நிழல் உலகில் சிறைப்பட்டிருக்கும் குழந்தைகளை தோர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்க்குப் பிறகு, மார்வெலின் படங்களில் அவர்களது மேஜிக் மிஸ்ஸாகிறது. மாயாஜாலங்களை மட்டுமே நம்பிக் களங்கமிறங்குவதை மார்வெல் என்டர்டெயின்மென்ட் தவிர்க்கவேண்டும்.
டிசி என்டர்டெயின்மென்டில் இருந்து கிறிஸ்டியன் பேலை மார்வெல் என்டர்டெயின்மென்டின் வில்லனாக வருகிறார். தானோஸ் போலொரு வில்லனுக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் புது வில்லன்கள் யாரும் அச்சுறுத்தவோ, ஈர்க்கவோ இல்லை. கிறிஸ்டியன் பேல் போலொரு நடிகரை வில்லனாக ரசிக்கத்தக்கும் வகையில் பயன்படுத்தாதது படத்தின் குறை. ‘தோர்: ரக்னோரக்’ படத்தை இயக்கிய டைக்கா வாட்டிட்டி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முயற்சி செய்திர...