Shadow

எம்ஐபி: மென் இன் ப்ளாக் (2019)

M.I.B-Tamil-poster

Men in Black (1997), Men in Black 2 (2002), Men in Black 3 (2012) ஆகிய மூன்றுமே வேற்றுக் கிரக உயிரினங்களுடன் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் ஒருங்கே அமையப்பெற்ற வெற்றித் திரைப்படங்கள். அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகமான Men in Black: International, ஜூன் 14 ஆம் ட்ஹேதி அன்று வெளியாகிறது.

வில் ஸ்மித்தும், டாமி லீ ஜோன்ஸும் முதல் மூன்று பாகங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில், அவெஞ்சர்ஸ் புகழ் மார்வெல் ஹீரோவான தோர் பாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வோர்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் லியம் நீசனும் (விருதகிரியின் மூலமான Taken படத்தின் நாயகன்), டெசா தாம்ப்சனும் (அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்தில் தோர் இவரேற்ற பாத்திரமான வால்க்ரீயைத் தான் ஆஸ்கார்டின் ராணியாக்குவார்) நடித்துள்ளனர்.

இப்படங்களின் அடிப்படை கதைக்கரு என்னவென்றால், வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்களும், மனித இனத்துடன் சேர்ந்து இந்தப் பூமியில் வாழ்ந்து வருகின்றன; MIB நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் மட்டுமே இந்த வேற்றுக்கிரகத்து உயிரினங்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். லண்டனில் தொடங்கப்படும் MIB நிறுவனத்தில் இப்படத்தின் கதை தொடங்கி, உலகம் முழுவதும் பயணிக்கிறது. மனித இனத்தை அழிக்க நினைக்கும் சில ஏலியன்களை, அதி நவீன ஆயுதத்தால் தடுத்து நிறுத்துவதுதான் இந்தப் புது ஏஜென்ட்களின் வேலை.

முதல் மூன்று படங்களை பேரி சொனன்ஃபெல்ட் இயக்கியிருந்தார். இப்படத்தை, கேரி கேரி (F. Gary Gary) இயக்குகிறார். தி இட்டாலியன் ஜாப் (2003), லா அபைடிங் சிட்டிஸன் (2009), வசூல் சாதனை புரிந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 (2017) போன்ற படங்களை இயக்கியவர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.