Shadow

Tag: Disney India

ஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்

ஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழகப் பிரபலங்கள் இணைகிறார்கள். நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் தந்துள்ளார். ஒரு பாடலையும் பாடியுள்ளார். தமிழின் பிரபல பாடலாசிரியாக விளங்கும் தளபதி விஜயின் சர்கார், பிகில் படங்களுக்கு பாடல் தந்த பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்குத் தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தின் மிகப்பிரபல கதாபாத்திரமான ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார். குணச்சித்திர நடிப்பில் கலக்கும் திவ்யதர்ஷிணி (விஜ...
தி லயன் கிங் விமர்சனம்

தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளியான 'தி லயன் கிங்' படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், 'ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)' எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தி ஜங்கிள் புக் குதூகலத்தில், டிஸ்னி இப்படத்தைப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வெளியிடுகிறது. அதுவும் 'டிஸ்னி இந்தியா', நேரடியாகத் தமிழிலேயே 'டப்' செய்து வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு. வில்லன் சிங்கம், ராஜா சிங்கத்தைக் கொன்று, குட்டி சிங்கத்தையும் கொ...
கேப்டன் மார்வெல் விமர்சனம்

கேப்டன் மார்வெல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' படத்தில் தானோஸினை மண்ணைக் கவ்வச் செய்யும் போகும் சக்தி எது? கேப்டன் மார்வெல் என்ற க்ளூவினை 'அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார்' படத்தில் கொடுத்திருப்பார்கள். யார் அவர், அவரது சக்தி என்ன போன்ற விஷயங்களுக்குப் பதிலாக வந்துள்ளது கேப்டன் மார்வெல் படம். மார்வெலின் கதை சொல்லும் பாணிக்கு, இப்படம் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், கேப்டன் மார்வெல் தானோஸ்க்குப் பெரும் சவாலாக இருப்பார் எனும் நம்பிக்கையைத் தருகிறது. யூ.எஸ். ஏர் ஃபோர்ஸில் பைலட்டாக இருக்கும் கெரோல் டென்வெர்ஸ் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என நான்-லீனியராகச் சொல்லியுள்ளனர். வொண்டர் வுமன் படத்தில் கேல் கேடோட் கதாபாத்திரத்தின் நோக்கம் மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், கேப்டன் மார்வெலான ப்ரீ லார்சனுக்கு அந்தக் கொடுப்பிணை வாய்க்காததுதான் படத்தின் ஈர்ப்பளவில் சுணக்கம் ஏற்படுவதற்குக் காரணம்...