32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Done Media

405 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 27
செய்திகள் வரிசை (பக்கம் 2)
மையல் விமர்சனம் | Myyal review சினிமா

மையல் விமர்சனம் | Myyal review

ஆடு திருடனான மாடசாமிக்கும், மந்திரம் – தந்திரம் தெரிந்த அல்லிக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் சமய சந்தர்ப்பம் சாதகமாக இல்லாததால் அவர்கள் பிரிய நேரிடுகிறது. அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. மையல் என்பது மயக்கம் அல்லது மோகம் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன். மைனா படத்தில் கிளைச்சிறை பொறுப்பதிகாரி பாஸ்கராக நடித்திருந்த சேது, இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மையல் படத்தின் இயக்குநர் APG ஏழுமலை, […]

24/05/2025 Dinesh R
Good Bad Ugly விமர்சனம் | GBU review இது புதிது

Good Bad Ugly விமர்சனம் | GBU review

அஜித்தின் விசிறிகளை மகிழ்விப்பதற்கென்றே படத்தை எடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். மாஸாக அஜித்தைக் காட்ட, படத்தின் கதையில் அதற்கான தருணங்களை உருவாக்காமல், ஃப்ரேம்க்கு ஃப்ரேம் மாஸ் தெரியவேண்டும் என்ற எளிய சூத்திரத்தைக் கையிலெடுத்து, முழுப் படத்தையும் 139 நிமிட மெகா ரீல்ஸாகக் கொடுத்துவிட்டார் ஆதிக். ரெட் டிராகன் எனும் டானாகிய AK, நல்ல தந்தையாக மகனைச் சந்திக்க வேண்டுமெனச் சட்டத்தின் முன் சரணடைகிறார். அவர் சிறையில் இருந்து வெளியாகும் பொழுது, மகனோ ஸ்பெயின் சிறையில் அடைப்படுகிறார். மகனைக் காப்பாற்ற […]

10/04/2025 Dinesh R
TEST – கிரிக்கெட்டும், வாழ்க்கையளிக்கும் சோதனைகளும் அயல் சினிமா

TEST – கிரிக்கெட்டும், வாழ்க்கையளிக்கும் சோதனைகளும்

கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் கதையாகும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான, அழுத்தமான கதைகளைத் […]

06/03/2025 Dinesh R
VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர் Teaser

VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர்

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் #VD12 படத்திற்கு ‘கிங்டம்’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது.  டீசரில், சூர்யா தமிழுக்கும், ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக […]

13/02/2025 Dinesh R
விடாமுயற்சி விமர்சனம் சினிமா

விடாமுயற்சி விமர்சனம்

ஒரு நோக்கத்தை, குறிக்கோளை அடையும் பொருட்டு ஒருவர் மேற்கொள்ளும் செயலை முயற்சி (try/ effort) எனலாம். அத்தகைய முயற்சியில் வெற்றி பெறாவிட்டால், துவண்டு அப்படியே அம்முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பதை விடாமுயற்சி எனலாம். ஒரு போட்டியில் கோப்பையை வெல்ல மேற்கொள்ளும் செயல்களை முயற்சி என்றழைக்கலாம். அப்போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், மனம் துவளாமல் அடுத்த முறையிலோ, அடுத்தடுத்த முறையிலோ வென்று காட்டுவதற்கு விடாமுயற்சி தேவைப்படுகிறது. ஒரு கார் பயணத்தில் மனைவி கயலைத் தொலைத்து விடுகிறார் […]

06/02/2025 Dinesh R
ராஜபீமா விமர்சனம் இது புதிது

ராஜபீமா விமர்சனம்

பிக் பாஸ் – சீசன் 1 (2017) வெற்றியாளரான ஆரவ் நாயகனாக நடித்திருக்கும் படம். அவர் பிக் பாஸை விட்டு வெளியானதுமே எடுக்கப்பட்ட படம். படம் தயாராகி சுமார் ஆறு வருடங்கள் ஆகிறது. ஓவியாவுடனான ஆரவின் புகழ்பெற்ற மருத்துவ முத்தம் ரெஃபரென்ஸ் படத்தில் வருகிறது. ஓவியாவும் ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார். யோகிபாபு இளமையாகக் காணப்படுகிறார். ராஜா என்பவர் பீமா எனும் யானையை வளர்க்கிறார். முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும் ராஜாவின் யானைக்குப் பதிலாக, வேறொரு யானையை அவருடையது என […]

31/01/2025 Dinesh R
குடும்பஸ்தன் விமர்சனம் இது புதிது

குடும்பஸ்தன் விமர்சனம்

‘குடும்பஸ்தனா வெற்றிகரமான வாழ்க்கை வாழணும்ன்னா வளைஞ்சி நெளிஞ்சி தான் ஆகணும்’ என்றும், ‘அப்படிலாம் வளைஞ்சி நெளியணும்ன்னு தேவையில்ல’ என்றும் இரு தரப்பு மல்லுக்கட்டுகிறது. அந்தக் குடும்ப மல்லுக்கட்டு ஈகோவில் எந்தக் கொள்கை முந்துகிறது என்பதே குடும்பஸ்தன் கதையாகும். கதையின் சின்ன லைனாக இதை எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அழகான லேயர்ஸை வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. மணிகண்டன் காதலித்து வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். காதல் மனைவி சான்வே மேகனாவிற்கு கலெக்டராக வேண்டும் என்பது […]

25/01/2025 Dinesh R
முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம் அயல் சினிமா

முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்

நிலம் சார்ந்த போராட்டத்தை மையப்படுத்திய படமாக முஃபாசா அமைந்துள்ளது. பெரு வெள்ளத்தில் தன் தாய் தந்தையரைப் பிரிந்த, முஃபாசா என்ற குட்டிச் சிங்கம், இன்னொரு நிலம் வந்தடைகிறது. ஆறு, மலை கடந்து தான் வாழ ஒரு நிலமும், அங்கு தன் இனமும் இருப்பதாக முஃபாசாவிற்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நிலம் மாறி வந்த முஃபாசாவிற்கு டேக்கா எனும் குட்டிச் சிங்கம் தன் தாய் தந்தையிடம் பேசி, தங்கள் நிலத்தில் தங்குவதற்கு அனுமதி வாங்குகிறது. இரு சிங்கங்களும் நண்பர்களாக […]

21/12/2024 Dinesh R
விடுதலை பாகம் – 2 விமர்சனம் இது புதிது

விடுதலை பாகம் – 2 விமர்சனம்

முழு உண்மைக்கும், அதிலிருந்து எடுத்துப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் செய்திக்குமான வித்தியாசம் எவ்வளவு என்பதைப் படம் பேசுகிறது. அதிகாரம் என்பது நினைத்ததைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், அது நிகழாத பட்சத்தில், நடப்பதை எல்லாம் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் புனைவுத் திறமை உடையது என்பதைப் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. அதிகாரச் சக்கரத்தின் ஏதோ ஒரு பல்லில், ஒட்டிக் கொள்ள இடம் கிடைத்தாலும், சக்கரத்தின் சுழற்சிக்குத் தக்கவாறு தனது தனிப்பட்ட நலனையும் வளர்ச்சியையும் முதன்மைப்படுத்திக் கொண்டு, யார் மீதாவது, எதன் மீதாவது […]

20/12/2024 Dinesh R
ஜாலியோ ஜிம்கானா விமர்சனம் இது புதிது

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

நான்-ஸ்டாப் நான்சென்ஸ் என படத்தைப் பற்றிப் படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளனர். ‘லாஜிக் பார்க்க்காதீங்க. மூளையைக் கழட்டி வைத்துவிட்டு, ஜாலியா படம் பார்த்துச் சிரிச்சுட்டுப் போங்க. உங்களைச் சிரிக்க வைக்கிறதே மட்டுமே எங்கள் நோக்கம்!’ என படம் தொடங்கும் முன்பே இயக்குநரின் வாய்ஸ்-ஓவர் ஒரு வேண்டுகோளை விடுக்கிறது. வெள்ளைக்காரன் பிரியாணி எனும் உணவகத்தை நடத்தி வருகின்றார் தங்கசாமி. தொழில் நொடிந்து போக, அவரது பேத்தி பவானி, கடன் வாங்கி ஒரு பிரியாணி கடையைத் தாத்தாவிற்கு வைத்துக் கொடுக்கின்றார். அரசியல்வாதியான அடைக்கலராஜ் […]

24/11/2024 Dinesh R
கங்குவா விமர்சனம் இது புதிது

கங்குவா விமர்சனம்

தந்தைக்கும் மகனுக்குமான ஜென்மாந்திர பந்தத்தைப் பேசுகிறது படம். நவீன ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் ஜீடோ எனும் சிறுவன், ஃபிரான்சிஸ் தியோடரிடம் அடைக்கலம் புகுகிறான். இது 2024 இல். பெருமாச்சியின் வீரனும் இளவரசனுமான கங்குவா, பெருமாச்சிக்குத் துரோகம் செய்யும் கொடுவாவின் மகனைத் தத்தெடுத்துக் காப்பதாக வாக்களிக்கிறார். அடைக்கலம் புகுந்தவனை ஃபிரான்சிஸ் காப்பாற்றுகிறாரா, கொடுவாவின் மகனைக் கங்குவா காப்பாற்றுகிறாரா என இரண்டு கதைகள் இணையாகப் பயணிக்கிறது. பெருமாச்சி, அரத்தி, முக்காடு, வெண்காடு, மண்டையாறு என ஐந்து தீவுகள் பாரதத் […]

14/11/2024 Dinesh R
கொட்டுக்காளி விமர்சனம் இது புதிது

கொட்டுக்காளி விமர்சனம்

கூழாங்கல் படத்தினை இயக்கிய P.S.வினோத்ராஜின் இரண்டாவது படம். முதற்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவா தயாரித்திருந்தனர்; இரண்டாவது படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடகக்ஷன்ஸில் இயக்கியுள்ளார். வழக்கமான வணிக, மசாலா படங்களைத் தவிர்த்து பார்வையாளர்களின் சிந்தனையைக் கோரும் படங்களை எடுப்பதற்காகவே இயக்குநருக்கு பாராட்டுக்கள்.  கொட்டுக்காளி என்றால் அழுத்தமான பிடிவாதக்காரி எனப் பொருள் கொள்ளலாம். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மீனாவை சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர் மீனாவின் பெற்றோரும், பாண்டியின் குடும்பத்தினரும். மீனாவின் முறைமாமன் பாண்டி ஆவார். வீட்டிலிருந்து கிளம்பி சாமியாரின் இருப்பிடம் வரையிலான […]

23/08/2024 Dinesh R
டோபமைன் @ 2.22 | சமகால பிரச்சனைகளின் எதிரொலி சினிமா

டோபமைன் @ 2.22 | சமகால பிரச்சனைகளின் எதிரொலி

‘டோபமைன் @ 2.22′ எனும் படத்தை, திரவ் இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநரும் நடிகருமான திரவ், “ ’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாதல் பற்றிய கதையாக இது நகரும். 18-20 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் […]

17/08/2024 Dinesh R
விடாமுயற்சி | நடிகர் நிகில் பற்றி மகிழ் திருமேனி Movie Posters

விடாமுயற்சி | நடிகர் நிகில் பற்றி மகிழ் திருமேனி

அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடித்துள்ள நடிகர் நிகிலின் கதாபாத்திரத்தையும் வெளியிட்டுள்ளது. நிகில் பற்றி இயக்குநர் மகிழ்திருமேனி, “திறமையான புதிய நடிகர்கள் கிடைப்பது ஒரு இயக்குநருக்கு மகிழ்ச்சியான விஷயம். அவர்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டும்படியான கதாபாத்திரத்தில் பெரிய திரையில் கொண்டு வருவது எங்களுக்கும் பெருமையான தருணம்தான். ’விடாமுயற்சி’ படத்தில் இளம் திறமையான நடிகர்கள் பலர் பணிபுரிந்துள்ளனர். […]

17/08/2024 Dinesh R
வேதா விமர்சனம் இது புதிது

வேதா விமர்சனம்

“சூத்திரர்கள் ஏன் காலில் உருவானார்கள்?” – கல்லூரி மாணவி வேதா. “அதான் பெரியய்யா சொன்னாரே! அதெல்லாம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்பட்டதுன்னு” – வேதாவின் அக்கா. “அப்புறம் ஏன் சட்டத்தைச் சொல்லித் தர்றாங்க? சமத்துவம்னு பேசுறாங்க?” ஆயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரரும், நூற்றைம்பது கிராமங்களுக்குத் தலைவருமான பெரியய்யா என்றழைக்கப்படும் ஜிதேந்தர் பிரதாப் சிங் ஒரு மாமன்னன் போல் வலம் வருகிறார். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், அனைவரும் முன்னேற வேண்டும், ஆனால் மற்ற சமூகத்தினரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணமுடையவர். […]

16/08/2024 Dinesh R