
மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்
இருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. அத்தகைய சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்ற கர்வம் கொண்ட இங்கிலாந்து அரசின் தலைநகரமான லண்டன் ஒருவேளை நகரத் தொடங்கினால்? ஆம், முழு நகரமே பெரிய வாகனம் போல் சக்கரங்களில் நகரத் தொடங்கிவிட்ட காலத்தில், லண்டன் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதுதான் படத்தின் கதை. பிலீப் ரீவ், 2001 இல் எழுதிய 'மார்டல் இன்ஜின்ஸ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது.
கதிர்வீச்சின் பாதிப்பில் நிலமும் நீரும் பாழாகி விட, மக்கள் ராட்சஷ வாகனங்களில் அடைக்கலம் புகுகின்றனர். அதற்கும், 'அழியக்கூடிய இயந்திரங்கள்' எனப் பொருள்படும்படி தலைப்பு வைத்துள்ளனர். எல்லாமும் அழியும், இங்கிலாந்து பேரரசிலும் சூரியன் அஸ்தமிக்கும் என்பதே படத்தின் உட்கரு.
ஒரு பெரும் நகரமே சக்கரங்களில் பயணிக்கிறது என்ற மிகு கற்பனையை மிக அற்புதமாகத் திரையில் கொண்டு ...