Shadow

Tag: Hot Spot movie

“பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிடி பரவிய பிறகு மிகப்பதட்டமாக இருந்தேன்” – இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்

“பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிடி பரவிய பிறகு மிகப்பதட்டமாக இருந்தேன்” – இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட் ஆகும். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் படத்தொகுப்பாளர் முத்தையா, " 'அடியே' படத்திற்கு முன்பே கிடைத்த வாய்ப்பு இது. இந்தப் படத்திற்காக நிறையச் சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் படம் நன்றாக வந்தது. சோஷியல் அவேர்னஸ் உள்ள படம். நல்ல வரவேற்பு தந்ததற்கு நன்றி. தொடர்ந்து இது போல் நல்ல படம் செய்ய முயற்சி செய்கிறோம்" என்றார். இசையமைப்பாளர் வான், "விக்னேஷ் கார்த்தி அண்ணாவிற்கு முதல் நன்றி. ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து, என்னால் இது முடியும் என நம்பி, என்னை அழைத்து வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என்...
Hot Spot விமர்சனம்

Hot Spot விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை. Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டினால்? ஆண், சமையலறையில் சிறைப்பட்டால்? ஆண், மாமனாரின் ஏச்சுபேச்சுக்கும் ஆளானால்? ஆண், நண்பர்களைப் பார்க்கச் செல்ல மாமனாரின் அனுமதியை எதிர்பார்க்க நேர்ந்தால்? இதுதான் Happy Married Life-இன் கதை. ஆதித்யா பாஸ்கரின் அதிர்ச்சியாகும் பாவ...
ஹாட் ஸ்பாட் | ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம்

ஹாட் ஸ்பாட் | ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம்

சினிமா, திரைச் செய்தி
கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாட் ஸ்பாட்’ ஆகும். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே. ஜே. பாலமணி மார்பன், “ஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. விக்னேஷ் நாலு வருடமாகப் பழக்கம். லாக்டவுன் டைமில் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம். ‘திட்டம் இரண்டு’ படம் செய்த போதே இப்படத்தின் கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. ட்ரெய்லர் மிகப் பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி நிறையக் கருத்துக்கள் வருகிறது. படம் பாருங்கள் பிடிக்கும். அதன் பிறகு கருத்துச் சொல்லுங்கள்” என்றார். சிக்ஸர...