Shadow

Tag: Keerthy Suresh

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

சினிமா, திரைத் துளி
மேயாத மான், மெர்க்குரி படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படத்தில், தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க, அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்டோன் பென்ச் பிலிம்ஸின் 'படைப்பு எண்: 3', செப்டம்பர் 12 அன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற...
சர்கார் விமர்சனம்

சர்கார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாகப் போட்டு விடுவதால், செக்‌ஷன் 49 P-இன் படி, மீண்டும் சட்டத்தின் உதவியோடு பேலட் ஓட்டைப் போடுகிறார் சுந்தர் ராமசாமி. கள்ள ஓட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் சுந்தரைச் சீண்டி விட, தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார் சுந்தர். செங்கோலினை நிறுவ நல்லதொரு சர்க்கார் அமையவேண்டுமென விரும்புகிறார் சுந்தர் ராமசாமி. செங்கோல் என்றால் நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி. சர்க்கார் என்றால் அரசாங்கம். மக்களுக்கு நல்லது செய்யத் தடையாக இருக்கும் அரசு இயந்திரத்தின் சக்கரங்களான ஆளுங்கட்சியை எப்படி ஓரங்கட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. சினிமா என்பது கனவுத்தேசம்தானே! நல்ல சர்க்காரைத் தன்னால் தான் உருவாக்க முடியுமென்ற ஒரே கனவைப் பலர் காணலாம். கனவு மட்டும் காணாமல் செயலில் இறங்குகிறார் சுந்தர் ராம...
நடிகையர் திலகம் விமர்சனம்

நடிகையர் திலகம் விமர்சனம்

அயல் சினிமா, கட்டுரை, சினிமா, திரை விமர்சனம்
சினிமா, இன்றளவும், ஆண்கள் மட்டுமே கோலேச்சி வரும் துறையாக உள்ளது. டி.பி.ராஜலட்சுமி, பானுமதி, சாவித்திரி போன்ற மிகச் சிலரே விதிவிலக்குகளாகத் தங்களுக்கான முத்திரையை அழுத்தமாகத் திரையுலகில் பதித்துள்ளனர். துடுக்கான உடற்மொழியாலும், துள்ளலான பாவனைகளாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற கலைஞர் சாவித்திரி. அவரைப் பற்றிய 'பையோ-பிக்' படமாகத் தெலுங்கில் "மகாநதி" என படம் எடுத்துள்ளார் நாக் அஷ்வின். மிக அற்புதமான ஒரு காண் அனுபவத்தைப் படம் தருகிறது. தமிழ் டப்பிங்கும் உறுத்தாமல், தேவையான இடத்தில் தெலுங்கு வசனங்களையே அப்படியே பயன்படுத்தியுள்ளது சிறப்பு. 'தொடரி' படத்தைப் பார்த்து விட்டு கீர்த்தி சுரேஷை, இந்தப் படத்தில் சாவித்திரியாக நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் நாக் அஷ்வின். படத்தின் உயிராய் மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தின் இரண்டாம் பாதியில், கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மறைந்து சாவித்திர...