Shadow

Tag: Lal

ஸ்டார் விமர்சனம்

ஸ்டார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திரைத்துறையில் நாயகனாக சாதிக்க வேண்டுமென்கின்ற கனவுடன் வாழ்ந்து வரும் இளைஞன், தன் கனவை நிஜமாக்க வாழ்க்கையில் என்ன மாதிரியான தடைகளையும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறான், அவற்றைக் கடந்து அவன் தன் கனவை அடைந்தானா என்பதைப் பேசும் படமே இந்த “ஸ்டார்”. சினிமாவில் சாதிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி இறுதியில் தன்னை ஒரு புகைப்படக் கலைஞராக நிலைநிறுத்திக் கொண்ட ஒரு நடுத்தர மனிதன் (லால்), தன் ஒட்டுமொத்தக் கனவையும் வளர்ந்து வரும் மகன் (கவின்) தோள்களில் தூக்கி வைக்க, பள்ளியில் ஆறு வயதில் பாரதியார் வேஷம் போட்டு மேடை ஏறப் போகும் மகன் கலை, அப்பாவின் வார்த்தைகளின் வழியே எதிர்காலத்தில் தான் ஒரு நடிகனாக நாயகனாக வரவேண்டும் என்கின்ற கனவையும் தன் மனதில் ஏற்றிக் கொள்கிறான். அந்தக் கனவு அவனை எப்படி தூக்கத்தையும் நிம்மதியையும் தொலைக்கச் செய்து துரத்தியது என்பதை விவர...
சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறுவயதில் சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்யப் போகும் போது இல்லாத தன்னம்பிக்கை முடி திருத்தம் செய்து முந்நூற்று அறுபது டிகிரி கண்ணாடிகளில் நம்மையும் திருத்தப்பட்ட நம் தலையையும் பார்த்து,, “ச்சே நாம கூட நல்லாதான்டே இருக்கோம்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வெளியேறும் போது தன்மானம் தாறுமாறாக ஏறியிருக்கும். நம்மை இப்படி அழகாக்கி அனுப்பிய சலூன் கடைக்காரர் மீது மரியாதை கலந்த அபிமானமும்,  அதே சீப்பு தான் வீட்டிலும் இருக்கிறது, ஆனால் இவர் சீவுவது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது என்கின்ற கேள்வியோடு வீடு திரும்புவோம். இந்த அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும்  முடி திருத்துநராக வரும் லால் இருவருக்கும் இடையே நடக்கிறது. மேற்சொன்னபடி அப்படியே நடக்காமல் அறிமுகம் வேறு ஒரு புதிய திணுசில் ரசிக்கும்படியே நடக்க...
தமிழ்க்குடிமகன் விமர்சனம்

தமிழ்க்குடிமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊருக்குள் ஒரு பெரிய வீட்டிற்குள் சாவு விழுந்துவிடுகிறது. அந்த ஊரில் பிணத்திற்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும், குடிமகன் என்று பொதுவாக அழைக்கப்படும் சின்னச்சாமி (சேரன்) கதாபாத்திரம் தனக்கு முன்பு நேர்ந்த அவமானகரமான நிகழ்வுகளால்,  பிணத்திற்கு சடங்குகள் செய்து அடக்கம் செய்யும் வெட்டியான் பணியை விட்டுவிட்டு வேறு தொழில் செய்து பிழைத்து வருகிறான்.  ஒட்டுமொத்த ஊரும் அவனை இறந்த பெரியவருக்கு இறுதிச்சடங்கு செய்து தான் ஆக வேண்டும் என்று அவனை வற்புறுத்த,  மிரட்ட, அந்தத் தொழிலை இனி தன் வாழ்நாளில் தான் ஒரு போதும் செய்யப் போவதில்லை என்று சின்னச்சாமி திடமாக முடிவு செய்து ஒட்டு மொத்த ஊரையும் எதிர்த்து நிற்கின்றான். இதன் முடிவு என்ன ஆனது என்பதே இந்த தமிழ்க்குடிமகன் பேசும் அரசியல்.சமகால சமூக நிகழ்வுகளையும், சாதிய நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் முன்னிட்டுப் பார்க்கும் போது தமிழ்க்குடிமகன் ஒரு தவிர...