Shadow

Tag: M.Sasikumar

அசுரவதம் விமர்சனம்

அசுரவதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிட்டார் இயக்குநர். நாயகன் அசுரனை வதம் செய்கிறார். அசுரனுக்கு ஓர் அழைப்பு வருகிறது. அதில் பேசும் குரல், ‘இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு சாவு’ என்கிறது. அடுத்து நடக்கும் சில நிகழ்வுகளில் அசுரன் அரண்டு போயிருக்கும் நிலையில் நாயகன் அறிமுகமாகிறார். அதன் பின் நடக்கும் ஆடு புலியாட்டமே படம். முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் வந்து, அபத்தமான நகைச்சுவை, பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள் போன்றவை எதுவுமின்றி, திசை மாறாமல் ஒரே நேர்க்கோட்டில் படத்தை நகர்த்தியமைக்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். சுருக்கமான பின் கதையில் கூறப்படும் பழி வாங்குவதற்கான வலுவான காரணத்தை யூகிக்க முடியாமல் திரைக்கதையைக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு. படத்திற்கு ௭ஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம். படத்தின் பலவீனங்களில் ஒன்று பின்ணனி இசை. காட்சிக்கு ‘டெம்போ’ ஏற்ற வேண்டுமானால் காது கிழியும் சத்தத்துடன்தான் பின்...
கொடிவீரன் விமர்சனம்

கொடிவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொடிவீரன் எனும் பெயர் கொண்ட சாமியாடியின் அருள்வாக்கு பலிதம் ஆகிறது. தீர்க்கதரிசணங்கள் நிகழ்ந்தே தீரும் என்ற மனிதனின் ஆதி நம்பிக்கை தான் படத்தின் மையச் சரடு. வீரன் என்பதை நாயகன் கொடிவீரன் என்றும், கொடி என்பதை அவன் மனம் கவர்ந்த மலர்க்கொடி என்றும் கூடத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஆனால், கொடிவீரனுக்கும் அவன் தங்கை பார்வதிக்கும் உள்ள பாசப்பிணைப்புத்தான் கொடிவீரன் படத்தின் கதை. பெண் கதாபாத்திரங்களை வழிபாட்டுக்குரியவர்களாகத் தன் படைப்புகளில் சித்தரித்து வருபவர் இயக்குநர் முத்தையா. இந்தப் படத்தின் தொடக்கமும் அப்படியொரு உணர்வுபூர்வமான அத்தியாயமே! ரத்தினச் சுருக்கமாய், அது பல விஷயங்களைப் பேசி விடுகிறது. சமூகத்தில் வேர் விட்டிருக்கும் ஆணாதிக்க மனோபாவம், குற்றவுணர்வின்றி அதைப் பெருமையாகக் கருதும் ஆண்கள், அத்தகைய ஆண்களுக்குத் துணையாக இருக்கும் 'ஆம்பளடா!' கடவுள்கள் என அந்தக் காட்சிகளில் பொதிந்திரு...
பலே சசிகுமார்

பலே சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
“மகளிர் மட்டும்-க்குப் பிறகு ஜாலியான சூழல் இருந்த படப்பிடிப்பு இங்கே தான் மீண்டும் அமைந்தது. டிமானிட்டைசேஷன், புயல், அம்மாவின் மறைவு என மக்கள் இந்த ஒரு மாதமாகப் பட்ட கஷ்டங்களை மறந்து குடும்பத்தோடு ரசித்து மகிழ நல்லதொரு காமெடிப் படம்” என்றார் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை ரோகினி. “அரிவாள், முரட்டு மீசை என ரத்தம் தெறிக்கிற சசிகுமாரைத் திரையில் பார்த்துட்டு, ‘நானோ காமெடி பீஸ்? எப்படி செட் ஆகும்?’ எனப் பயந்துக்கிட்டே ஷூட்டிங்கிற்குப் போனேன். ஆனா, நேரில் ரொம்ப அமைதியானவர். அவர் கம்பெனில பேமென்ட் எல்லாம் வீடு தேடி சரியாக வந்துடுது. வருஷத்துக்கு கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் 10 படம் பண்ணணும். அத்தனையிலும் எனக்கு வாய்ப்புக் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்” என்றார் கோவை சரளா. “இந்தக் கதையை சோலை பிரகாஷ் சொன்னதும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதில் வரும் பாட்டி கேரக்டரைப் பண்ணக் கூடியவர்கள் இரண்ட...
கிடாரி விமர்சனம்

கிடாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தூரின் சண்டியராய்த் தாட்டியம் செய்து ஊரையே மிரளச் செய்யும் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் எவனோ ஒருவன் கத்தியைப் பாய்ச்சி விடுகிறான். கொம்பையா பாண்டியன் வளர்த்து வைத்திருக்கும் பகைகளில் எது அச்சம்பவத்திற்குக் காரணமாய் அமைகிறது என்பதே படத்தின் கதை. மதயானைக் கூட்டம் படத்தில் மிரட்டியிருந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை, மீண்டும் அதே போலொரு பாத்திரத்தில் கச்சிதமாக உபயோகித்துள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன். வழக்கம் போல் கம்பீரமாக வலம் வருவதுதான், கொம்பையா பாண்டியன் பாத்திரத்தில் எழுத்தாளருக்கு வாய்த்தது எனச் சலிப்பில் இருக்கும் பொழுது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் உண்மையான சொரூபம் தெரிய வரும் போதுதான் படம் தன் உச்சத்தை அடைகிறது. கொம்பையா பாண்டியின் மகன் உடைய நம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ரவும் தன் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவர் முகத்த...