Shadow

Tag: Maali & Manvi Movie Makers

BOAT விமர்சனம்

BOAT விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சென்னை மீது ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்ற தகவலால் பதற்றத்துக்கு உள்ளாகின்றனர் மக்கள். கடலுக்குள் சென்று தப்பிக்கலாம் என குமரனின் துடுப்புப்படகில் சிலர் ஏறிக் கொள்கின்றனர். கரையில் இருந்து 12 மைல் தொலைவு கடலுக்குள் சென்று விட்டால், ஆங்கிலேயரின் ரோந்து படகு தொல்லையில் இருந்தும், வானில் இருந்து குண்டு வீசப்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்து விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. அத்துடுப்புப்படகில் நூலகர் முத்தையா, மயிலாப்பூர்வாசி நாராயணன், அவரது மகள் லட்சுமி, பாலக்காட்டு முகமது ராஜா, விஜயவாடா விஜயா, அவரது மகன் மகேஷ், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட லால் சேட்டு, துடுப்புப்படகுக்காரர் குமரன், குமரனின் பாட்டி முத்துமாரி ஆகியோர் உள்ளனர். பாதி வழியில் இர்வின் எனும் வெள்ளைக்காரரும் அப்படகில் அழையாத வேண்டா விருந்தாளியாகச் சேர்ந்து கொள்கிறார். இவர்களுடன் படகிற்குள் ஒரு எலி, படகிற்கு வெளியே ஒரு சுறா...
“சென்னை கானாவும், கருநாடக சங்கீதமும்” – ஜிப்ரான் வைபோதா | BOAT

“சென்னை கானாவும், கருநாடக சங்கீதமும்” – ஜிப்ரான் வைபோதா | BOAT

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, ''சிம்பு தேவனுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. '24ம் புலிகேசி' படத்தில் இணைந்தோம். அதற்காக விவாதித்துப் பாடல்களையும் உருவாக்கினோம். அவருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையாக இருந்தது. அதன் பிறகு...
“மேக்கப்பை சீராக்கிக் கொள்ள முடியாது” – கெளரி கிஷன் | BOAT

“மேக்கப்பை சீராக்கிக் கொள்ள முடியாது” – கெளரி கிஷன் | BOAT

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். நாயகி கௌரி கிஷன், ''நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வளரும் கலைஞர்களின் கனவாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததைப் பெருமிதமாகக் கருதுகிறேன். இந்தப் படத்தில் லட்சுமி என்ற இளம் பெண் கதாபாத்திரத்த...
BOAT படம் எப்படி உருவானது? – இயக்குநர் சிம்புதேவன்

BOAT படம் எப்படி உருவானது? – இயக்குநர் சிம்புதேவன்

சினிமா, திரைச் செய்தி
நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான 'போட்' படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படம் எப்படி உருவானது என்பது பற்றி இயக்குநர் சிம்புதேவன், ''நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஃபேன்டஸி, காமெடி என வித்தியாசமான வகைமையில் இருக்கும். இந்தப் படத்திலும் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்பை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் பிரேம்குமார் தான் வழங்கினார். அவரை முதன்முதலாக சந்தித்து அரை மணி நேரம் இந்தக் கதையை விவரித்தேன். இந்தக் கதை என் மனதில் நீண்ட நாளாக இருக்கும் கதை. கொரோனா காலகட்டத்தின் போது நான் எழுதிய 'கசடதபற' எனும் படைப்பு வெளியானது. அந்தத் தருணத்திலேயே 'போட்' கதையை எழுதிக் கொண்டிருந்தேன். இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன போது, 'இ...