Shadow

Tag: Mamitha Baiju

பிரேமலு | ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

பிரேமலு | ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

சினிமா, திரைச் செய்தி
தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12, 2024 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.கிரிஷ் A D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதரா...
ரெபல் விமர்சனம்

ரெபல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மூணாரின் நெற்றிக்குடி எஸ்டேட்டைச் சேர்ந்த கதிர் பாலக்காட்டுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார். கல்லூரியிலுள்ள மலையாளிகள் தமிழர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். கதிர் கலக்கக்காரராக உருமாறி புரட்சி செய்கிறார். படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, நாயகன் கதிர் புரட்சி தான் தீர்வு எனக் கலகம் செய்வது, செங்கொடி ஏந்திய LDP கட்சியின் SFY எனும் மாணவர் சங்கத்தை எதிர்த்தும் போராடுகிறார். வசனங்களில் கம்யூனிஸ்ட் என்றே விளிக்கிறார்கள். நாயகன் எதிர்க்கும் இன்னொரு கொடி, நீல வண்ணத்தில் இருக்கும் UDP கட்சியின் KSQ எனும் மாணவர் சங்கமாகும். காங்கிரஸ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளனர். கொடி இங்குப் பிரச்சனையில்லை, அதை யார் பிடித்துள்ளார் என்பதைப் பொறுத்தே சிக்கல் என்கிறார் கல்லூரி விரிவுரையாளர் உதயகுமாராக வரும் கருணாஸ். நாயகன் கதிர் உருவாக்கும் TSP (தமிழ் ஸ்டூடன்ட்ஸ் பார்ட்டி)-இன் கொடி, கருப...
பிரேமலு விமர்சனம்

பிரேமலு விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஜாலியாய் ஒரு படம் பார்த்துச் சிரித்து மகிழ வேண்டுமென்றால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள பிரேமலு மிக நல்ல தேர்வாக இருக்கும். கல்லூரிக் காதல் புட்டுக் கொள்ள, UK போக விசாவும் கிடைக்காமல் போக, ஊரை விட்டு எங்கேயாவது போனால் பரவாயில்லை என்று நண்பனுடன் GATE பயிற்சிக்காக ஹைதராபாத் செல்கிறான் சச்சின். ஹைதராபாத்தும் சலித்து, சென்னையில் இருக்கும் நண்பர்களுடன் இணையலாம் என யோசிக்கும் பொழுது IT-இல் பணிபுரியும் ரீனுவைப் பார்க்கின்றான். கண்டதும் காதலில் விழ, ரீனுவை இம்ப்ரஸ் செய்ய சச்சின், அவனது நண்வன் அமல் டேவிஸுடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகள் தான் படத்தின் கலகலப்பான கதை. இத்தனை மெலிதான ஒரு கருவை, மிகவும் ரசிக்கும்படியான திரைக்கதையாக எழுதி அசத்தியுள்ளனர் இயக்குநர் கிரிஷ் AD-உம், கிரண் ஜோஸும். ‘காதல்டா! ஒரு தடவ தான் வரும், ஒருத்தங்க மேல தான் வரும்’ என ஓவர் எமோஷ்னல் ஆகாமல், அதில் அன்றாட வாழ்வி...