Shadow

Tag: Prabhas

பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது

பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'பிரபாஸ்ஹனு', ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது. கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக 'பிரபாஸ் ஹனு' எனும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். இந்தக் கூட்டணியின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுவதால், இந்தப் படைப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் பிரம்மாண்டமான பங்களிப்புடன் உருவாகும் இந்த #பிரபாஸ் ஹனு படைப்பின் மூலம், சினிமா ரசிகர்களுக்கு இதற்கு முன் கிடைத்திராத புதிய அனுபவத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது . ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும், நம் ...
பிரபாஸ் | ஆயிரம் கோடிகளில் வசூலாகும் புகழ்மிகு இந்திய நடிகர்

பிரபாஸ் | ஆயிரம் கோடிகளில் வசூலாகும் புகழ்மிகு இந்திய நடிகர்

அயல் சினிமா
கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை 'கடவுளுக்கு நிகரானவர்' என்று அழைத்தது, ​​​​ பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும். சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரம்மாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது. மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, அவரது நட்சத்திர பலத்திற்குச் சான்றாகும். சமீபத்தில் அவர் நடித்த "கல்கி" திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரே ஒரு விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போதிலும், திரைப்படம் மிகப்பெரிய அன்பையும் வரவேற்பையும் பெற்றது நடிகரின் ஈடு இணையற்ற செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த...
கல்கி 2898 AD யின் பிரம்மாண்ட உலகத்தைப் பற்றிய அறிமுக வீடியோ அனிமேஷனில்

கல்கி 2898 AD யின் பிரம்மாண்ட உலகத்தைப் பற்றிய அறிமுக வீடியோ அனிமேஷனில்

சினிமா, திரைச் செய்தி
பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பார்வையாளர்களை காலத்தின் மீது ஒரு பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும். இப்படத்தின் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த பிரமாண்ட படைப்பிலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ‘கல்கி 2898 AD’ உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அறிமுகப்படுத்தும் வகையில், இப்படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ OTT இல் திரையிடப்பட உள்ளது, இந்த வீடியோவிற்கு நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ளார். பொழுதுபோக்கு செய்தி நிறுவனமான பிங்க்வில்லா தளத்தில் ...
பாகுபலி – 1000 கோடி நாயகன்

பாகுபலி – 1000 கோடி நாயகன்

சினிமா, திரைச் செய்தி
பாகுபலி 2-இன் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்தியத் திரைப்பட நாயகன் என்ற பெருமையை ஈட்டியுள்ளார். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு மாபெரும் சரித்திரமாகும். பாகுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது. இந்தக் காவிய படைப்பில், அமரேந்திர பாகுபலியாய்த் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிப்படுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாகுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற...
பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி - தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனி...