
Extraction விமர்சனம்
இந்திய போதைக் கடத்தல் மன்னன் சிறையில் அடைபட்டிருக்க, அவனது மகன் ஓவி மஹாஜனைக் கடத்தி விடுகிறான் பங்களாதேஷ் கடத்தல் மன்னன் அமிர். ஓவியைப் பணயத் தொகை தராமல் விடுவிக்க, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கூலிப்படை பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவில் இறங்குகிறது. அடைபட்ட பையனை, ஆஸ்திரேலியக் கூலிப்படையைச் சேர்ந்த நாயகன் டைலர் வெளியில் கொண்டு வந்த பிறகு, ஆஸ்திரேலியக் குழு யாரோ ஒருவனால் தாக்கப்படுகிறது. மறுபுறம், ஓவியை மீட்டுக் கொல்ல, அமிரின் ஆட்களும், பங்களாதேஷ் இராணுவமும் டாக்காவை முழுவதும் மூடித் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர். இந்தக் குழப்பங்களை எல்லாம் மீறி, ஓவியைப் பத்திரமாக இந்தியா கொண்டு வந்து டைலர் சேர்க்கிறானா என்பதுதான் படத்தின் கதை.
மார்வல் படங்களுக்கு ஸ்டன்ட் டைரக்டராகப் பணியாற்றிய சாம் ஹார்க்ரேவ் இயக்கியுள்ள முதல் படம். தோர் ஆக நடித்த க்றிஸ் ஹெம்ஸ்வொர்த், டைலர் ரேக்-காக நடித்துள்ளா...