Shadow

Tag: Rise East Pictures

நித்தம் ஒரு வானம் விமர்சனம்

நித்தம் ஒரு வானம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாறிக் கொண்டே இருக்கும் இயல்புடையது வானம். அதுவே வானத்தின் தனித்த அழகிற்குக் காரணம். மனிதனின் வாழ்க்கையை அழகுப்படுத்துவதும் அவனது வாழ்வில் நிகழும் இத்தகைய மாற்றங்களே! ஆனால் மாற்றத்தை விரும்பாத மனமோ, அதற்கு பயந்து முடங்கி விடுகிறது. ஒரு சிறு ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், வாழ்க்கையே முடங்கிவிட்டதாகக் கருதும் அர்ஜுன்க்கு வாழ்க்கையின் உண்மையான அழகையும், வாழ்வதற்கான உத்வேகத்தையும் அளிக்க இரண்டு கதைகள் சொல்கிறார் மருத்துவர் கிருஷ்ணவேணி. அந்தக் கதைகளின் ஊடாக அர்ஜுன் செய்யும் பயணமே படத்தின் கதை. மருத்துவர் கிருஷ்ணவேணியாக அபிராமி நடித்துள்ளார். மிகக் குறைவான காட்சிகளிலேயே தோன்றினாலும் நிறைவான ஸ்க்ரீன் பிரசென்ஸை அளித்துள்ளார். அர்ஜூனாக, இரண்டு கதைகளில் வரும் வீரா, பிரபா என மேலும் இரண்டு பாத்திரங்களில் தோன்றியுள்ளார். மூன்று கதாபாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டும் நேர்த்தியான நடிப்பைக் கொடு...
நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

சினிமா, திரைச் செய்தி
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ...
நித்தம் ஒரு வானம் – இன்ப அதிர்ச்சி தரப் போகும் அசோக் செல்வனின் 4 ஆவது கெட்டப்

நித்தம் ஒரு வானம் – இன்ப அதிர்ச்சி தரப் போகும் அசோக் செல்வனின் 4 ஆவது கெட்டப்

சினிமா, திரைச் செய்தி
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ...
போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது. சமீபத்திய ஸ்பைடர்-மேன் படத்தில், தொழில்நுட்பம் கொண்டு வில்லன் உருவாக்கும் மாய உலகத்தை, போதைப் பொடியை மூக்கினுள் இழுத்துக் கொண்டு உருவாக்கிக் கொள்கிறான் கார்த்திக். அவன் புத்தி எப்படி எல்லாம் மாறுகிறது என படம் பேசுகிறது. நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால், மெஸ்சேஜும் வேண்டுமென்ற இயக்குநர் K.R.சந்துருவின் உளக்கிடக்கை, அதற்கு எமனாகிவிட்டது. தலைப்பிலேயே அவரது விருப்பத்தைப் பட்டவர்த்தனமாய் உணர்த்திவிடுகிறார். போதை ஏறினால் புத்தி மாறிவிடும் என்...
போதை ஏறினால் புத்தி மாறும்

போதை ஏறினால் புத்தி மாறும்

சினிமா, திரைத் துளி
சில மனிதர்களின் வாழ்வில், போதை மயக்கம் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது அம்மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாகப் பேசும் ஒரு படம் தான் 'போதை ஏறி புத்தி மாறி'. 'ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ்' சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே மொத்த படத்தைப் பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக இது இருக்கும். குறும்படங்களில் நாயகனாகக் கலக்கிய தீரஜ் இந்தப் படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார். "தீரஜ் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாகப் பணியாற்றினோ...