Shadow

Tag: Russell Crowe

தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடவுள்களைக் கொல்லும் கோர், நிழல் உருவங்களை ஏவி புது ஆஸ்கார்டின் குழந்தைகளைக் கடத்தி விடுகிறான். நிழல் உலகில் சிறைப்பட்டிருக்கும் குழந்தைகளை தோர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்க்குப் பிறகு, மார்வெலின் படங்களில் அவர்களது மேஜிக் மிஸ்ஸாகிறது. மாயாஜாலங்களை மட்டுமே நம்பிக் களங்கமிறங்குவதை மார்வெல் என்டர்டெயின்மென்ட் தவிர்க்கவேண்டும். டிசி என்டர்டெயின்மென்டில் இருந்து கிறிஸ்டியன் பேலை மார்வெல் என்டர்டெயின்மென்டின் வில்லனாக வருகிறார். தானோஸ் போலொரு வில்லனுக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் புது வில்லன்கள் யாரும் அச்சுறுத்தவோ, ஈர்க்கவோ இல்லை. கிறிஸ்டியன் பேல் போலொரு நடிகரை வில்லனாக ரசிக்கத்தக்கும் வகையில் பயன்படுத்தாதது படத்தின் குறை. ‘தோர்: ரக்னோரக்’ படத்தை இயக்கிய டைக்கா வாட்டிட்டி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முயற்சி செய்திருந...
டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
1999ஆம் ஆண்டு, இதே தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய படம்தான், ‘தி மம்மி’. 2001இல், ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ் (The Mummy Returns)’ என்கிற இரண்டாம் பாகமும் வெளியாகி உலகெங்கிலும் பெரியதொரு பரபரப்பை உருவாக்கியது. அவ்விரு படங்களுமே உலக அளவில் மிகப் பெரிய வசூலை வாரிக் கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு படங்களையுமே ஸ்டீஃபன் சோமோர்ஸ் இயக்கியிருந்தார். சற்று இடைவெளிக்குப் பிறகு 2008இல், ‘தி மம்மி: டூம்ப் ஆஃப் தி ட்ராகன் எம்பரர்’ வெளியாகி, அப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. ராப் கோஹன் அம்மூன்றாம் பாகத்தை இயக்கியிருந்தார். இம்மூன்று தொடர் படங்களைத் தவிர கிளைத் திரைப்படங்களாக ‘தி ஸ்கார்பியான் கிங் (The Scorpion King)’ போன்றவையும் வெளியாகின. இரண்டு காமிக் கதைப் புத்தகங்களும் கூட ‘மம்மி’ கதைக்கருவை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டன. கிட்டதிட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அலெக்ஸ் கர்ஸ்மெனின் நேர...