Shadow

Tag: Ryan Gosling

Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review

Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எல்லா நம்பிக்கைகளும் முற்றிலுமாகத் தகர்ந்து விட, ஒரு கடைசி முயற்சி செய்து பார்ப்போம் என்று கையறு நிலையில் செய்யப்படுவதை, ‘ஹெயில் மேரி’ என்பார்கள். இப்பதம் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படுவதாகும். பூமியைக் காப்பாற்ற, அப்படி மேற்கொள்ளப்படும் ஒரு கடைசி முயற்சிக்கு ப்ராஜெக்ட் ஹெயில் மேரி என பெயர் வைக்கிறார்கள். சூரியனை மெல்ல மங்கச் செய்கிறது ஆஸ்ட்ரோபேஜ் எனப்படும் நுண்ணுயிரி. அந்த ஆஸ்ட்ரோபேஜ்களைத் தடுக்காவிட்டால், அடுத்த முப்பது வருடங்களில் பூமியின் வெப்பம் பத்திலிருந்து பதினைந்து டிகிரி அளவிற்குக் குறைந்து பெரும் பாதிப்புகளை விளைவிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. ‘டெள சீ-டை (Tau Ceti)’ எனும் நட்சத்திரம் மட்டுமே இந்நுண்ணுயிரியின் பாதிப்பில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளது என்பதைக் கண்டறிகின்றனர். அந்நட்சத்திரம் மட்டும் எப்படி ஆஸ்ட்ரோபேஜ்களின் தாக்குதலில் இருந்து தப்பின என்று க...
ஃபர்ஸ்ட் மேன் விமர்சனம்

ஃபர்ஸ்ட் மேன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
"இது, மனிதனுக்கு ஒரு சின்ன அடி எடுத்து வைத்தல், மனித குலத்திற்கோ இது மிகப் பெரும் நகர்வு" என்ற வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை நிலவில் கால் வைக்கும்பொழுது சொன்னார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங். மனித குலம், பூமியில் நீடிக்கும் நாள் வரை அவரது பெயர் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கும். அவரது சரிதத்தை, 2005 ஆம் ஆண்டு, 'ஃபர்ஸ்ட் மேன்: தி லைஃப் ஆஃப் நீல் A.ஆர்ம்ஸ்ட்ராங்' எனும் நூலாகக் கொண்டு வந்தார் ஜேம்ஸ் R.ஹன்ஸென். அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, 'லா லா லேண்ட்' படத்தை இயக்கிய டேமியன் சஸெல், "ஃபர்ஸ்ட் மேன்" படத்தை இயக்கியுள்ளார். படத்தில், அமெரிக்கக் கொடியை நடுவது போல் காட்சியை வைக்கவில்லை இயக்குநர் டேமியன். அதனால் பலத்த சர்ச்சைகள் எழுந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட, "மிகவும் துரதிர்ஷ்டவசமானது இது. அமெரிக்காவின் சாதனையைச் சொல்வதைக் கூடப் படக்குழுவினர் சங்கடமாகக் கருதுகின்றனர். மிகவும் மோசம...